சிம் கார்டு மோசடி: பெண்கள், பதின்ம வயதினர் உட்பட 88 பேர் சிக்கினர்

1 mins read
a9595774-84dc-4275-a3d3-e096bd34b45b
77 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. - கோப்புப் படம்: சாவ் பாவ்

சிம் கார்டு பதிவில் நடைபெற்ற மோசடி தொடர்பாக அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் 88 பேர் சிக்கியுள்ளனர்.

அவர்களில் 77 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், பிடிபட்டுள்ள 88 பேரில் 34 பேர் 15க்கும் 17க்கும் இடைப்பட்ட வயதினர் என்று காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) கூறியது.

மோசடிக்கு எதிரான அமைப்பையும் ஏழு காவல்துறைப் பிரிவுகளையும் சேர்ந்த அதிகாரிகள் ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 17 வரை தீவு முழுவதும் சோதனை நடத்தினர்.

பண மோசடி உள்ளிட்ட குற்ற நடவடிக்கைளுக்குப் பயன்படுத்தக்கூடிய சிம் கார்டுகளை சட்டவிரோதமாகப் பதிவு செய்வோரைக் குறி வைத்து அந்தச் சோதனை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட 77 பேரில் 14 பேர் பெண்கள். விசாரணையில் இருக்கும் எட்டுப் பேரில் மூவர் பெண்கள். அந்த எட்டுப் பேரும் 15க்கும் 80க்கும் இடைப்பட்ட வயதினர்.

பிடிபட்டுள்ள 88 பேரும், குற்றக் கும்பல்களுக்காக தங்களது பெயரில் சிம் கார்டுகளைப் பதிவு செய்து $100 முதல் $500 வரை பணம் பெற்றதாகவும் 10 முதல் 40 வரையிலான சிம் கார்டுகளை அவர்கள் மோசடியான முறையில் பதிவு செய்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்ததாகக் காவல்துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்