https://www.straitstimes.com/singapore/courts-crime/man-charged-in-telok-blangah-murder-taken-back-to-crime-scene
தெலுக் பிளாங்காவில் 73 வயது ஆடவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், நவம்பர் 2ஆம் தேதி சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
32 வயதான கேப்ரியல் ஃபூங் ஷி செங், காலை 9.15 மணிக்குக் காவல்துறைப் பாதுகாப்புடன் தெலுக் பிளாங்கா ஹைட்ஸ் புளோக் 57க்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சிவப்புச் சட்டை அணிந்து, கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் அவர் காணப்பட்டார்.
டாம் நோம் போ என்பவரை கேப்ரியல் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலை நடந்த கட்டடத்தின் கீழ்த்தளத்திற்கு கேப்ரியல் அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் காவல் துறையினர் அவரை அடையாளமில்லாத கறுப்பு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி மாலை 6 மணியளவில், புளோக் 61 அருகே உதவி கேட்டுக் காவல் துறைக்கு அழைப்புகள் வந்தன.
ரத்த வெள்ளத்தில் இருந்த ஆடவர் ஒருவர் புளோக் 57ல் இருந்து புளோக் 61ல் உள்ள காப்பிக் கடைக்கு ஓடியதைச் சாட்சிகள் கண்டனர்.
காயமடைந்த மற்றொரு 53 வயது ஆடவர், புளோக் 61ல் உள்ள மருந்தகத்திற்கு ஓடிச் சென்று உயிரிழந்தவருக்காக உதவி கோரியுள்ளார்.
விரைந்து வந்த மருத்துவர் ஒருவர் ரத்தப்போக்கை நிறுத்த முயன்றார். ஆனால் அதிகாரிகள் வந்தபோது அந்த ஆடவர் அசைவற்றுக் கிடந்தார்.
பின்னர் கேப்ரியல் காவல் துறையில் சரணடைந்தார். அக்டோபர் 7ஆம் தேதி நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டு அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணை நவம்பர் 4ஆம் தேதி நடக்கவுள்ளது.
கேப்ரியல் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
