தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பருவநிலை நடவடிக்கை திட்டங்களுக்கு தெமாசெக் $100 மில்லியன் நிதி

1 mins read
e373c767-fbb2-4014-8d76-3326bb14ef37
சிங்கப்பூர் ஷங்ரிலா ஹோட்டலில் நடந்த தெமாசெக்கின் 50வது ஆண்டு நிறைவு விருந்தில் உரையாற்றிய தெமாசெக் தலைவர் லிம் பூன் ஹெங் (இடமிருந்து இரண்டாவது), பருவநிலை மாற்றத்தை, “நம் காலத்தின், வரையறுக்கும் நெருக்கடி,” என்றார். - படம்: சாவ்பால்

சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக் பருவநிலை நடவடிக்கை திட்டங்களுக்கு ஆதரவளிக்க தனது அறப்பணியின் ஒரு பகுதியாக $100 மில்லியனை மூலதனமாக ஒதுக்குகிறது.

இந்தத் தொகை சலுகை மூலதனமாக அமையும். அதாவது தெமாசெக் அத்தகைய திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக வழக்கமான சந்தைக் கடன்களைவிட மிகவும் சாதகமான விதிமுறைகளின் கீழ் நிதியை வழிநடத்தும் என்று தெமாசெக் தலைவர் லிம் பூன் ஹெங் திங்கட்கிழமை (செப்டம்பர் 23) கூறினார்.

சிங்கப்பூர் ஷங்ரிலா ஹோட்டலில் நடந்த தெமாசெக்கின் 50வது ஆண்டு நிறைவு விருந்தில் அவர் பேசினார்.

இதன்மூலம், வர்த்தக முதலீட்டாளர்கள், பிற சலுகை நிதியாளர்கள் உட்பட இந்த திட்டங்களுக்கு நிதியளிக்க தயங்கக்கூடிய ஆதாரங்களிலிருந்து கூடுதல் மூலதனத்தை ஈர்க்கலாம் என்று தெமாசெக் கருதுகிறது.

இந்த நிதி தெமாசெக் சமூக நன்கொடைகளிலிருந்து வரும். நிறுவனத்தின் இலக்குகளுடன் இணைந்து, தலைமுறை தலைமுறையாக தாக்கத்தை உருவாக்கும் இலக்கைக் கொண்ட அறநிதியாகும்.

கடந்த 50 ஆண்டுகளில் சிங்கப்பூரில் மட்டுமே இடம்பெற்ற முதலீட்டிலிருந்து, உலகின் மற்ற பகுதிகளுக்கும் தனது முதலீட்டு அளவை தெமாசெக் வளர்த்துள்ளது என்றும், 1,000 ஊழியர்கள் ஒன்பது நாடுகளில் பரவியுள்ளனர் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு தலைமுறையும் வளமடைவதை உறுதிசெய்ய எதிர்காலத்தை மனதில் வைத்திருப்பதே தெமாசெக்கின் நோக்கம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்