தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் புதிய மூத்தோர் பராமரிப்பு வசதி

2 mins read
28236c3e-b158-400b-b838-a95128654f9f
மூத்தோருக்கான நவீன வாழ்க்கை வசதிகளை அளிக்கும் செயின்ட் பெர்னாடெட் நிறுவனம் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் இணைந்து இந்தப் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
முதியோர் சார்ந்த துறையில் சேரக்கூடுமென்று  ஒருபோதும் நினைத்ததில்லை என்றார் ஹரேஷ் கண்ணா, 18.
முதியோர் சார்ந்த துறையில் சேரக்கூடுமென்று ஒருபோதும் நினைத்ததில்லை என்றார் ஹரேஷ் கண்ணா, 18. -  படம்: கீர்த்திகா ரவீந்திரன் 

முதியோர் சார்ந்த துறையில் சேரக்கூடுமென்று ஒருபோதும் நினைத்தில்லை என்கிறார் ஹரேஷ் கண்ணா, 18.

ஆனால் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்ற முதுமையியல் பட்டயக்கல்வி அவரது ஆர்வத்தைத் தூண்டியது.

“சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள் தொகை அதிகரிக்கும் வேளையில் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதை இலக்காகக்கொள்ள இந்தப் பட்டயக்கல்வி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இறுதியாண்டு மாணவரான ஹரேஷ்.

மூப்படையும் மக்கள் தொகை அதிகரிப்பு அண்மையில் சிங்கப்பூரில் ஒரு கவலைக்குரிய அம்சமாக இருந்து வருகிறது. அவர்களின் தேவைகளைச் சரிவரச் சமாளிப்பதற்கும் முதியோர் பராமரிப்பில் மாணவர்களுக்குத் திறன்களை வழங்கவும் முதியோருக்கான தங்கும் வசதி தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்தில் மே 28ஆம் தேதி அறிமுகம் கண்டது.

‘செயின்ட் பெர்னாடெட் லைஃப்ஸ்டைல் வில்லேஜ்@டிபி’ எனப்படும் இந்த வசதி வளாக அடிப்படையிலான சிங்கப்பூரின் முதல் வசதியாகும்.

மூத்தோருக்கான நவீன வாழ்க்கை வசதிகளை அளிக்கும் செயின்ட் பெர்னாடெட் நிறுவனம் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் இணைந்து இந்தப் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

புதன்கிழமை (மே 28) தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில் பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யோ வான் லிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பராமரிப்புப் பணியில் தமது தனிப்பட்ட பயணம், நாடாளுமன்ற உறுப்பினராகப் பராமரிப்பு முயற்சிகளை ஆதரிப்பதற்கான தமது பங்கைப் பற்றிப் பேசிய திருவாட்டி யோ, கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்துரைத்தார்.

“இந்தப் புதிய முயற்சி பராமரிப்பு வளங்களை விரிவடையச் செய்துள்ளது. இளையர்கள் இதில் ஈடுபாடு காட்டுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று அவர் பாராட்டினார்.

‘செயின்ட் பெர்னாடெட் லைஃப்ஸ்டைல் வில்லேஜ்@டிபி’ வசதியில் இரண்டு பிரிவுகள் ஆண்களுக்கும் இரண்டு பிரிவுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்படும். ஒவ்வொரு பிரிவும் கிட்டத்தட்ட ஐந்து குடியிருப்பாளர்களுக்கு இடமளிக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏறக்குறைய 300 பேர், பல்வேறு திட்டங்கள் மூலம் முதியோர் பராமரிப்பில் பயிற்சி பெறுவார்கள்.

உடல்நலம், சமூக ஈடுபாடு போன்றவற்றில் மூத்தோருக்கு ஆதரவளிப்பதுடன் முக்கியமான தொழில்துறை திறன்களை அவர்கள் பெறுவார்கள்.

குறிப்புச் சொற்கள்