ஹாங்காங்: சிங்கப்பூரின் தெமாசெக் டிரஸ்ட் நிறுவனம், எச்எஸ்பிசி வங்கியின் சொத்து நிர்வாகப் பிரிவு நடத்தும் ஜப்பானிய சூரியசக்தி நிறுவனம் ஒன்றில் 50 மில்லியன் டாலர் (66.9 மில்லியன் வெள்ளி) முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
தெமாசெக் டிரஸ்ட்டின் ஒரு பிரிவான ஏபிசி இம்பேக்ட் (ABC Impact), ஜப்பானின் தெக்கோமா எனர்ஜி (Tekoma Energy) நிறுவனத்தின் சில பங்குகளை வாங்கவுள்ளது. ஏபிசி இம்பேக்ட்டும் எச்எஸ்பிசியும் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
தேக்கோமா, தெமாசெக் டிரஸ்ட் முதலீடு செய்யும் தொகையைத் தங்களின் சூரியசக்தித் தகடுத் திட்டங்களை மேம்படுத்தப் பயன்படுத்தும். இம்பேக்ட், தெக்கோமாவில் முதலீடு செய்வது, உலகளவில் அதிகம் பேசப்படும் நிதி தொடர்பான உத்திகளில் ஒன்றாகும்.
ஆசிய கண்டத்தைப் பொறுத்தவரை முதலீடு செய்யப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேவேளை, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இந்த விவகாரங்களின் தொடர்பில் கூடுதல் கடுமையான விதிமுறைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அரசாங்கம் நடத்தும் தெமாசெக் நிறுவனம் உள்ளிட்டவற்றின் நன்கொடை சம்பந்தப்பட்ட சொத்துகளை நிர்வகிக்கும் தெமாசெக் டிரஸ்ட், 850 மில்லியன் டாலருக்கும் (1.14 பில்லியன் வெள்ளி) அதிக மதிப்புள்ள தொகையைக் கவனிக்கிறது.