‘சிடிஇ’ இணைப்புச் சாலை ஏழு நாள்கள் மூடல்

‘சிடிஇ’ இணைப்புச் சாலை ஏழு நாள்கள் மூடல்

1 mins read
b0be482c-2015-41aa-aac6-98bb7c388e9c
நகரை நோக்கிய மத்திய விரைவுச்சாலையை (சிடிஇ) அப்பர் சிராங்கூன் சாலையுடன் இணைக்கும் நுழைவாயில். - படம்: கூகல் மேப்ஸ்

அப்பர் சிராங்கூன் ரோட்டுடன், நகரை நோக்கிய மத்திய விரைவுச்சாலையை (சிடிஇ) இணைக்கும் 8B நுழைவாயில் ஏப்ரல், மே மாதங்களில் ஏழு நாள்களுக்கு மூடப்படும்.

அந்த இணைப்புச் சாலை ஏப்ரல் 3, 15, 17, 19, 29ஆம் தேதிகளிலும் மே 1, 6ஆம் தேதிகளிலும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை இரண்டு மணி வரை மூடப்படும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் வியாழக்கிழமை (மார்ச் 26) தெரிவித்தது.

தீவு விரைவுச்சாலைக்கு நடுவே புதிய நடைபாதை, சைக்கிளோட்டப் பாதை ஆகியவற்றைக் கொண்ட பாலத்தை அமைக்கத் தொடரும் பணிகளுக்கு வகைசெய்ய இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பாலம் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு அது, பொத்தோங் பாசிருக்கும் பெண்டிமியருக்கும் இடையே சென்றுவருவதற்கான தொடர்புகளை மேம்படுத்தும்.

சாலை மூடலின்போது சிடிஇ நுழைவாயில் 8B-ஐப் பயன்படுத்த நினைக்கும் வாகன ஓட்டிகள், பிராடல் ரோட்டுக்குச் செல்லும் நுழைவாயில் 10 வழியாக அப்பர் சிராங்கூன் ரோட்டுக்குப் போகுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

நகரை நோக்கிய மத்திய விரைவுச்சாலையின், சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலைப் பகுதியை இணைக்கும் 8B நுழைவாயில் பகுதி தொடர்ந்து போக்குவரத்துக்குத் திறந்திருக்கும்.

குறிப்புச் சொற்கள்