சிங்கப்பூருக்குள் பத்து மாதிரித் துப்பாக்கிகளை மறைத்துக் கொண்டுவரும் முயற்சியை ஜூன் 14ஆம் தேதி அதிகாரிகள் முறியடித்தனர்.
பாசிர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் வருடி மூலம் ஒரு சரக்குக் கொள்கலனைச் சோதனையிட்டபோது, அதில் ஏதோ வித்தியாசமாக இருந்ததைக் கண்டனர் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் புதன்கிழமை (ஜூலை 10) தனது ஃபேஸ்புக் பக்கம் வாயிலாகத் தெரிவித்தது.
அந்த மாதிரித் துப்பாக்கிகளில் கைத்துப்பாக்கிகள் உட்பட பலவகைத் துப்பாக்கிகள் அடங்கும்.
பின்னர் அவ்வழக்கு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இறக்குமதி, ஏற்றுமதி ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, மாதிரி பொம்மைத் துப்பாக்கிகளை அனுமதியின்றி சிங்கப்பூருக்குள் கொண்டுவரக்கூடாது. அவ்விதியை மீறுவோருக்கு $100,000 அல்லது அப்பொருள்களின் மதிப்பைப் போல் மும்முடங்கு, இவற்றில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படும். அல்லது ஈராண்டுவரை சிறைத்தண்டனை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

