மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதியால் பயனடைந்த தெங்கா குடியிருப்பாளர்

மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதியால் பயனடைந்த தெங்கா குடியிருப்பாளர்

4 mins read
தமது புதிய வீட்டில் குளிரூட்டும் முறை தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கியபோது, மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதியை முற்றிலுமாகக் கைவிடும் முடிவிற்கு வந்துவிட்டார் தெங்கா வட்டாரவாசி திரு விமல். ஆனால், எஸ்பி குழுமத்தின் குடியிருப்பாளர் தொடர்பு குழு வழங்கிய உடனடி நிவாரணையின் காரணமாக, குளிரூட்டும் முறை மீது நம்பிக்கை மீண்டும் பிறந்தது. 48 மணி நேரத்திற்குள் வழங்கிய சேவையினாலும், தனிப்பட்ட கவனிப்பினாலும், வெறுப்புடன் இருந்த ஒருவர், ஒருங்கிணைந்த குளிரூட்டி முறையைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒருவராக மாறிய கதையைப் படியுங்கள். 
7fbcbc80-44d3-4b71-9861-1f4ef45c3219
தெங்கா வட்டாரத்தில் வசிக்கும் பாதுகாவலர் திரு விமலேஸ்வரன் தங்கமணி, 41, மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதியைப் பயன்படுத்துகிறார். - படம்: த.கவி

பாதுகாவலராகப் பணிபுரியும் 41 வயது திரு விமலேஸ்வரன் தங்கமணி தெங்கா வட்டாரத்தில் ஓர் ஈரறை வீட்டிக்குள் குடிபுகுந்தபோது, மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதியைப் பயன்படுத்த பெரும் ஆவலோடு இருந்தார்.

மத்திய குளிரூட்டிகளிலிருந்து குழாய்கள் வழியாக வரும் குளிர்ந்த தண்ணீரைப் பயன்படுத்தி வீடுகளைக் குளிரூட்டும் இத்தொழில்நுட்பம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, அவற்றைச் சிக்கலின்றி பராமரிக்கவும் வழிவகுக்கிறது.

பயனீட்டாளர்களுக்கு செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இது கைக்கொடுக்கிறது. 

ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு குளிரூட்டி வேலை செய்யாதது விமலுக்கு கவலையை அளித்தது. 

“2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், வீட்டு சாவி என் கைக்கு வந்தது. குளிர்சாதனத்தை இயக்கினேன். ஆனால், குளிராகவே இல்லை,” என்று விமல் நினைவுக்கூர்ந்தார். 

“அது சரியாக இயங்க இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என்று எண்ணி, பொறுத்துக்கொண்டேன்,” என்றார் அவர். 

விமலைப் பொறுத்தவரை, குளிரூட்டி ஆடம்பரம் அல்ல. அது ஓர் அத்தியாவசிய தேவை.

“ஒவ்வொரு வாரமும், நான் மூன்று முறை ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்குச் செல்வேன். அதன் காரணமாக, என்னுடைய உடல் மிகவும் சூடாக இருப்பது போன்ற ஓர் உணர்வு எனக்கு இருக்கும். அந்த உணர்வைப் போக்கி, இதமாகவும் சௌகரியமாகவும் இருக்க, குளிர்சாதனம் இயங்குவது அவசியம்,” என்று கூறினார் விமல். 

குளிர்சாதனத்தின் வெப்பநிலையைக் குறைத்த போதிலும், சுகமாக இருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படவில்லை. 

ஓராண்டிற்குப் பிறகு, நவம்பர் 2025ல், கழிவறையிலும் தம் அறையிலும், நீர் தேங்கியிருப்பதற்கான அறிகுறிகள் அவரது கழிவறை சுவர்களிலும், அறையின் சுவர்களிலும் காணப்பட்டன.

குளிரூட்டும் முறை பற்றி திரு விமலேஸ்வரன் தங்கமணி இதுவரை அறிந்திராத தகவல்களையும் திட்டங்களையும் அவரிடம் எஸ்பி குழுமத்தின் குடியிருப்பாளர் தொடர்பு குழு எடுத்துகூறியது.
குளிரூட்டும் முறை பற்றி திரு விமலேஸ்வரன் தங்கமணி இதுவரை அறிந்திராத தகவல்களையும் திட்டங்களையும் அவரிடம் எஸ்பி குழுமத்தின் குடியிருப்பாளர் தொடர்பு குழு எடுத்துகூறியது. - படம்: த.கவி

விரக்தியின் உச்சகட்டத்தை எட்டினார் விமல். 

ஒருங்கிணைந்த குளிரூட்டும் கட்டமைப்புக்கான சந்தாவை ரத்து செய்யும் நோக்குடன் எஸ்பி குழுமத்தின் அவசரத் தொடர்பு எண்ணை அழைத்தார்.

இந்த விவகாரம் எஸ்பி குழுமத்தின் குடியிருப்பாளர் தொடர்பு குழுவின் துணை மேலாளரான நதியா பின்டே அப்துல் ரஹிமிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதற்கு முன்பு, வங்கியில் முன்னணி ஊழியராக நதியா வேலைப்பார்த்திருந்தார். அந்த அனுபவம், வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்ற நன்கு கைக்கொடுத்தது. 

“திரு விமலுடைய உடல் நிலையைப் பற்றியும், குளிரூட்டி முறையை எந்தளவிற்குச் சார்ந்திருக்கிறார் என்பது பற்றியும் நான் தெரிந்துகொண்டபோது, அவருடைய சவால்களை உடனடியாக தீர்த்துவைக்க வேண்டும் என்று எண்ணினேன்.”

அவரது தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், எப்பொழுது என்னென்ன நடக்கும் என்ற தெளிவான ஒரு காலவரிசையை வழங்கினார் நதியா. “அவரது விரக்தியை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பிரச்சினையைத் தீர்க்க  நான் எப்பொழுது வருவேன் என்று தெளிவாக கேட்டுக்கொண்டார். நேரத்தோடு வரும்படியும் கேட்டுக்கொண்டார்,” என்று குறிப்பிட்டார் நதியா.

மூத்த பொறியாளர் ஒருவரின் துணையோடு, விமலின் வீட்டின் ஒருங்கிணைந்த குளிரூட்டி முறையை முழுமையாகப் பரிசோதித்தார் நதியா.

விசிறியின் சுருள் பகுதியில் அடைப்புகள் இருந்ததாலும் குளிர்தடுப்புகளின் காரணமாகவும் பிரச்சினைகள் நேர்ந்ததாகத் தெரியவந்தது.

“அவர் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க, நாங்கள் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றிய தகவல்களை அவரிடம் பகிர்ந்தேன்,” என சொன்னார் நதியா. 

48 மணிநேரத்திற்குள், நீர் தேக்கம் பிரச்சினை தீர்க்கப்பட்டது. குழாய்களின் தடுப்புகள் மாற்றப்பட்டன. விசிறியின் சுருள் பகுதியும் வல்லுநர்களால் சுத்தம் செய்யப்பட்டது.

அவர்கள் மேற்கொண்ட முயற்சி விமலின் மனநிலையை மாற்றியது. “நதியா மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் செய்வேன் என்று கூறிய அனைத்தையும் செய்து முடித்தார். இவ்வளவு விரைவாக மாற்றங்கள் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” என்று தெரிவித்தார் விமல். 

பழுது பார்க்கும் பணிகளுக்கு அப்பால், பயனீட்டாளர் கையேடையும் நதியா விமலிடம் கொடுத்தார். 

‘மைதெங்கா கேர்+’ எனும் திட்டத்திற்கும் அவரை அறிமுகப்படுத்தினார். 

சந்தாதாரர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு இருமுறை விசிறி சுருள் பகுதியை கட்டணமின்றி சீரமைக்கும் சலுகைகளை இத்திட்டம் வழங்குகிறது. இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு வசதி இருப்பது விமலுக்குத் தெரியாது. 

மேலும், மின்கட்டணத்தைக் குறைக்கவும் நதியா ஆலோசனை வழங்கினார். “எரிசக்தி சிக்கனத்திற்காக எந்த வெப்பநிலையைப் பயன்படுத்தவேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார். இப்பொழுது, மாதாந்தர கட்டணத்தைக் குறைக்க உதவுகின்றது, குளிர் இதமாகவும் உள்ளது,” என்று குறிப்பிட்டார் விமல். 

தமது பயனீட்டு, பராமரிப்பு கட்டணங்களில் கிட்டதட்ட 20 விழுக்காடு மட்டுமே குளிரூட்டப்பட்ட தண்ணீர் பயன்பாட்டிற்குச் செலவிடப்பட்டது என்பதில் மகிழ்ச்சி அடைகிறார் விமல்.
தமது பயனீட்டு, பராமரிப்பு கட்டணங்களில் கிட்டதட்ட 20 விழுக்காடு மட்டுமே குளிரூட்டப்பட்ட தண்ணீர் பயன்பாட்டிற்குச் செலவிடப்பட்டது என்பதில் மகிழ்ச்சி அடைகிறார் விமல். - படம்: த.கவி

தமது பயனீட்டு, பராமரிப்பு கட்டணங்களில் கிட்டதட்ட 20 விழுக்காடு மட்டுமே குளிரூட்டப்பட்ட தண்ணீர் பயன்பாட்டிற்குச் செலவிடப்பட்டது. 

இன்று, விமல் ஒருங்கிணைந்த குளிரூட்டி முறையைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தம் வீட்டிற்கு வெளியே ஒரு பெரிய, சத்தமான கொன்டன்சர் ஒன்று இல்லாததை ஒரு வெற்றியாகக் கருதுவதாகப் பகிர்ந்தார். 

“அது ‘ஸ்டைலோ-மைலோ’! நீங்கள் புது வீட்டுக்குச் செல்லும்போதே விசிறியின் சுருள் பகுதி உள்ளது, சுத்தமாக வைத்திருக்க ஒரு கொன்டென்சர் இல்லை. அதோடு, முதல் மூன்று ஆண்டுகளுக்கு, பழுது பார்க்கும் வேலைகளில் பணத்தை சேமிக்கமுடிகிறது,” என்று விமல் கூறினார். 

வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாது, தினமும் வேலையைத் தொடர்வதற்கு விமல் போன்றோரே காரணம் என்று சொன்னார் நதியா.

நதியாவைப் பொறுத்தவரை, ஒரு தொழில்நுட்ப பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மட்டும் வெற்றி அல்ல.

“பதற்றத்தோடு இருக்கும் ஒரு குடியிருப்பாளரின் கவலையைப் போக்கி, அவர் மனநிறைவு அடைவதை நான் வெற்றியாக கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை, அவர்கள் வெறும் குடியிருப்பாளர்கள் அல்ல. என்னுடைய சொந்த அண்டைவீட்டாரைப் போல அவர்களை நினைக்கிறேன்.”

தெங்கா வட்டாரம் தொடர்ந்து வளர்ந்து வரும் வேளையில், புதிய, சுற்றுச்சூழலைப் பேணும் தொழில்நுட்பத்தை மக்களுடன் இணைப்பதில் எஸ்பி குழுமம் உறுதியாக உள்ளது. 

மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்ள இந்த இணையத்தளத்தை நாடலாம். அல்லது, சிசிஎஸ்கு விண்ணப்பம் செய்யலாம்.

இந்தத் தகவலை உங்களுக்கு வழங்குவது எஸ்பி குழுமம்.
குறிப்புச் சொற்கள்