சிங்கப்பூருக்கென சிறப்பு டெஸ்லா கார் உருவாகிறது.
மாடல் வை ஆர்டபிள்யூடி 110 (Model Y RWD 110) வகை காருக்கான பதிவுகளை டெஸ்லா இப்போது பெற்று வருகிறது. இது, சிங்கப்பூருக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள காராகும்.
புதுப்பிக்கப்பட்ட மாடல் வை டெஸ்லா காருடன் இந்த காரும் வெளியாகிறது. புதுப்பிக்கப்பட்ட மாடல் வை கார் கடந்த ஜனவரி மாதம் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது.
வெளிநாடுகளில் டெஸ்லா வாகன விற்பனை குறைந்துவரும் வேளையில் இச்செய்தி வெளியாகியுள்ளது.
புதிய ஆர்டபிள்யூடி 110 டெஸ்லா காரை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 50 கிலோமீட்டருக்கு ஓட்டிப் பார்த்தது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சிங்கப்பூரில் இந்தக் காரை ஓட்டிப் பார்த்த முதல் ஊடகமாகும்.
பெயருக்கேற்றாற்போல் ஆர்டபிள்யூடி 110 கார், 110 கிலோவாட் சக்திகொண்டுள்ளது. மாடல் வை ஆர்டபிள்யூ கார், 255 கிலோவாட் சக்தியைக் கொண்டிருக்கும்; அதனால் அது வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டமைப்பின் பி பிரிவில் இடம்பெறுகிறது.
அதேவேளை, சிங்கப்பூருக்காகவே உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆர்டபிள்யூடி 110, ஏ பிரிவில் இடம்பெறத் தகுதிபெறுகிறது.
ஆர்டபிள்யூடி 110, சிங்கப்பூரின் சிஓஇ கட்டமைப்பைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூருக்கென உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது டெஸ்லா காராகும். முன்னதாக மாடல் 3 ஆர்டபிள்யூ 110 டெஸ்லா கார் சிங்கப்பூருக்கென உருவாக்கட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதே அணுகுமுறையை இலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்த காருக்கும் பின்பற்றுகிறது.