தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலாங்கிலிருந்து ஜூரோங்குக்கு விரிவடையும் ‘தாய்’ பேரங்காடி

2 mins read
ஜூரோங் பாயின்ட் வளாகத்தில் தடம் பதித்துள்ள ‘தாய் மார்க்கெட்’ வழங்கும் புதிய அனுபவம்
3359fdd5-e69d-46da-ad62-c59ef3b6bd95
புதன்கிழமை (செப்டம்பர் 24) முதல் ஜூரோங் பாயின்ட் பேரங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் சில பொருள்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைமஸ்

தாய்லாந்துப் பொருள்களை வாங்க முன்பு பீச் ரோட்டில் இருந்த கோல்டன் மைல் வளாகத்தை சிங்கப்பூரர்களும் இங்கு வாழும் தாய்லாந்து நாட்டினரும் நாடியிருந்தனர்.

தாய் சூப்பர்மார்க்கெட்டின் உரிமையாளர் 61 வயதான திரு லோ யுவன் செங், 1987ல் முதன்முதலில் கோல்டன் மைல் கட்டடத்தில் தனது கடையைத் திறந்து தாய்லாந்து காய்கறிகளையும் மளிகைப் பொருள்களையும் விற்பனை செய்தார்.

அந்தக் கட்டடம், ஒட்டுமொத்த விற்பனைத் திட்டத்தின்கீழ் விற்பனையானதும் 2023ம் ஆண்டில் காலாங் அவென்யூவில் உள்ள ‘அபெரியா’ என்ற ஷாப்பிங் சென்டருக்கு ‘தாய் சூப்பர்மார்க்கெட்’ இடமாறியது.

அன்று முதல் ஒரு சிறிய தாய்லாந்து அந்தக் கடைத்தொகுதியில் உருவாகியுள்ளது. ‘யாயா ஒரிஜினல் தாய் ஃபுட்’, ‘இம் எம் தாய் கிச்சன்’ என்ற பெயரில் உணவகங்கள் செயல்படுகின்றன. தாய்லாந்தின் உணவக நிர்வாகமான ‘ஃபொக்ஸ் கலெக்டிவ்’ உணவகத்தையும் ‘நூடல்ஸ்’ வகைக்கான கடையையும் அத்தொகுதி உள்ளடக்கியுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் தனது இணைய முன்பதிவினாலும் விநியோகத்தாலும் பெயர்பெற்று சிறந்த வளர்ச்சியடைந்த தாய் சூப்பர்மார்க்கெட் நிறுவனம், தற்போது, அதன் காலாங் கடையிலிருந்து விரிவாக்கம் காண்கிறது.

புதிய வாடிக்கையாளர்களை நாடி, தீவின் மேற்குப் பகுதியில் தடம் பதிக்கிறது அந்நிறுவனம். ஜூரோங் பாயிண்டில் தனது கிளையை தாய் சூப்பர்மார்க்கெட் அடுத்த வாரம் திறக்கவிருக்கிறது.

விரிவாக்கத்தின் அடையாளமாக ‘தாய் மார்க்கெட்’ என்ற புதிய பெயரில் திரு லோ தனது நான்கு சகோதரர்களின் ஆதரவோடு புதிய கிளையை திறக்கவுள்ளார்.

வருங்காலத்தில் வடக்கு, கிழக்கு, மத்திய வட்டாரங்களிலும் கிளைகளைத் திறக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதனுடன் ‘தலாட் தாய்’ வாழைப்பழ வறுவல் பதார்த்தத்தையும் பிரபலப்படுத்த அவரது நிறுவனம் விழைகிறது.

குறிப்புச் சொற்கள்