தாய்லாந்துப் பிரதமர் சிங்கப்பூர் வருகை

தாய்லாந்துப் பிரதமர் சிங்கப்பூர் வருகை

படம்: ஏஎஃப்பி

11 Oct 2023 - 9:02 pm

1 mins read

தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பில் வியாழக்கிழமை சிங்கப்பூருக்குத் தமது முதல் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்கிறார்.

அவரது பயணத்தின்போது அவருக்கு சடங்குபூர்வ வரவேற்பு வழங்கப்படும். அத்துடன், அவர் இஸ்தானாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தையும் சந்திப்பார்.

பிரதமர் லீ அவருக்கு அதிகாரபூர்வ விருந்தளித்துச் சிறப்பிப்பார். அதனைத் தொடர்ந்து, 61 வயதான திரு ஸ்ரேத்தா சிங்கப்பூர் பங்குச் சந்தை நிலையத்திற்குச் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துபயணம்