தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடற்பாலத்தில் மூன்று மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படலாம்

1 mins read
6d2af16b-1177-4c74-ab86-1f0800a5da9e
உட்லண்ட்ஸ் கடற்பாலம். - கோப்புப்படம்: சாவ்பாவ்

உட்லண்ட்ஸ் கடற்பாலம் வழியாக சனிக்கிழமை (ஜூன் 14) மலேசியா செல்வோர் குடிநுழைவு, சோதனைச்சாவடிகளைக் கடக்க மூன்று மணிநேரம் அல்லது அதற்கும் அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆணையம் சனிக்கிழமையன்று காலை 11.24 மணிக்கு ஃபேஸ்புக்கில் இதனை அறிவித்தது. மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் கடற்பால வழியில் போக்குவரத்து நெரிசல் தொடர்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் பள்ளி விடுமுறை காலத்தில் வாகனங்களில் மலேசியா செல்வோர் போக்குவரத்து நெரிசலை எதிர்நோக்கக்கூடும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் கடந்த மே மாதம் குறிப்பிட்டது.

உட்லண்ட்ஸ், துவாஸ் இரண்டு நிலவழி எல்லைகளிலும் வரிசையை முந்திக்கொண்டு செல்ல வேண்டாம் என்று ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அவ்வாறு செய்வோரை குடிநுழைவு நிறுத்தலாம்; மறுபடியும் பின்னால் சென்று வரிசையில் சேர்ந்துகொள்ளுமாறு ஓட்டுநர்களுக்கு உத்தரவிடப்படலாம் என்றும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் எடுத்துரைத்தது.

சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்குத் தடை விதிக்கப்படலாம் என்றும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்