தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோதமாகச் சிங்கப்பூர் கடல்பகுதிக்குள் நுழைந்த மூன்று மலேசியர்கள் கைது

1 mins read
922ec554-fbe4-4e23-92f3-2b16d835e4ae
படகை வேகமாகச் செலுத்தியபோது இரண்டு மலேசியர்கள் கீழே விழுந்தனர். - படம்: பிக்சாபே

https://www.straitstimes.com/singapore/three-malaysians-arrested-for-entering-singapores-waters-illegally

சிறு படகுமூலம் சட்டவிரோதமாகச் சிங்கப்பூர் கடல்பகுதிக்குள் நுழைந்த மூன்று மலேசியர்களைக் கடலோரக் காவற்படை அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) பின்னிரவு 2.05 மணிவாக்கில் சிங்கப்பூரின் வட-மேற்கு கடல்பகுதியில் உள்ள புலாவ் சரிம்பன் தீவு அருகே நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறு படகு ஒன்றில் வந்த மூவரையும் கண்ட கடலோரக் காவற்படை அதிகாரிகள் உடனடியாக அவர்களை நோக்கிச் சென்றனர். அதிகாரிகள் வருவதைக் கண்ட அம்மூவரும் மலேசியா நோக்கிப் படகை வேகமாகச் செலுத்தினர்.

அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க ஆபத்தான முறையில் அவர்கள் படகைச் செலுத்தினர். இரண்டு முறை கடலோரக் காவற்படையின் கப்பலிலும் அப்படகு இடித்தது.

படகை வேகமாகச் செலுத்தியபோது இரண்டு மலேசியர்கள் கீழே விழுந்தனர். இருப்பினும் அவர்கள் மீண்டும் படகில் ஏறினர்.

சட்டவிரோதமாக நுழைந்தவர்களைப் பிடிக்கும்போது அதிகாரி ஒருவருக்குச் சிறு காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களின் வயது 28க்கும் 47க்கு இடைப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் 28 வயது படகு ஓட்டுநர்மீது ஆபத்தான முறையில் படகை ஓட்டியது, அதிகாரிகளின் உத்தரவை மீறியது எனக் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்