சிங்கப்பூரில் ஜூன் 7ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
ஹஜ்ஜுப் பெருநாளன்று காலை வேளையில் இங்குள்ள 45 பள்ளிவாசல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொழுகைகளை நடத்தவுள்ளன.
அவற்றில் 37 பள்ளிவாசல்களில் காலையில் இரண்டு முறையும் எட்டுப் பள்ளிவாசல்களில் மும்முறையும் தொழுகை நடைபெறும் என்று சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் தெரிவித்தது.
மற்ற 24 பள்ளிவாசல்களில், காலையில் ஒரு முறை தொழுகை நடைபெறும்.
தெம்பனிசிலுள்ள டாருல் கஃபூர் பள்ளிவாசலின் முதல் தொழுகைக்கு மட்டும் முன்பதிவு தேவைப்படுகிறது. அந்தத் தொழுகை, ஹஜ்ஜுப் பெருநாளன்று காலை 7.20 மணிக்கு நடைபெறும்.
அதற்கான முன்பதிவு ஜூன் 3ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கும். விருப்பமுள்ளோர் books.masjids.sg என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்யலாம்.
கூடுதலாக, தங்கள் வீட்டுக்கு அருகே தொழுகை மேற்கொள்ள நினைப்பவர்கள் பள்ளிவாசல்களுடன் தொடர்புடைய 36 வழிபாட்டு இடங்களையும் நாடலாம்.
மேல்விவரங்களுக்குச் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றத்தின் (முயிஸ்) இணையத்தளத்தை நாடலாம்.