இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

1 mins read
66ce5e58-eac1-44b2-bfdd-620c7741b7e1
‘சுமத்ரா ஸ்குவால்ஸ்’ காரணமாக ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு அதிகாலை மற்றும் காலை நேரங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் பெரும்பாலான நாள்களின் பிற்பகல் நேரங்களில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் குறுகிய நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.

வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 16) ஆணையம் வெளியிட்ட இருவார வானிலை முன்னுரைப்பில், மழை சில நாள்களில் மாலை வரை நீடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சுமத்ரா ஸ்குவால்ஸ்’ காரணமாக ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு அதிகாலை மற்றும் காலை நேரங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அன்றாட அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான நாள்களில் 33 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் சில நாள்களில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது பிற்பாதியில் மொத்த மழையளவு, தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகக் குறைவான மழைப்பொழிவுடன் ஒரு சில நாள்கள் இருக்கக்கூடும்.

குறிப்புச் சொற்கள்