இந்த டிசம்பர் மாதத்தின் முதல் இரு வாரங்களின் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
சில நாள்களில் கனமழை மாலை வேளைகளிலும் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை பொதுவாக 24ல் இருந்து 33 டிகிரி செல்சியசுக்கு இடைப்பட்டிருக்கும் என்று சிங்கப்பூர் வானிலை மையம் திங்கட்கிழமை (டிசம்பர் 1) தெரிவித்தது.
சில நாள்களில் வெப்பநிலை சுமார் 34 டிகிரி செல்சியசைத் தொடக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவின் பெரும்பாலான பகுதிகளில் சேரும் மழைநீர், சராசரி அளவில் இருக்கும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

