தியோங் பாரு பிளாசாவில் உள்ள கோல்டன் வில்லேஜ் திரையரங்கு இம்மாதம் (மார்ச்) 29ஆம் தேதிக்குப் பிறகு மூடப்படவிருக்கிறது.
திரையரங்கின் தற்போதைய குத்தகைக் காலம் மார்ச் 29உடன் முடிவடைகிறது.
“அருகில் இருக்கும் திரையரங்கங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து செல்லலாம். ஜிவி ஃபுனான், ஆர்ச்சர்டில் உள்ள ஜிவி சினிலெஷர், கிரேட் வர்ல்டில் உள்ள ஜிவி கிராண்ட் உள்ளிட்ட திரையரங்குகளுக்கு அவர்கள் போகலாம்,” என்று கோல்டன் வில்லேஜ் புதன்கிழமை (மார்ச் 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஜிவி தியோங் பாரு திரையரங்கு, 1994ஆம் ஆண்டிலிருந்து செயல்படுகிறது.
“கடந்த 32 ஆண்டுகளாக ஆதரவளித்துவந்த ரசிகர்கள், பங்காளிகள், தியோங் பாரு சமூகத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி,” என்று கோல்டன் வில்லேஜ் கூறியது.

