தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கதவுகளை மூடுகிறது தோ பாயோ ஜயண்ட் பேரங்காடி

1 mins read
9d3c75b6-2446-48d5-a672-5893c4bf67f4
மூடப்படும் ஜயண்ட் பேரங்காடிக் கிளைகளின் எண்ணிக்கை ஒன்பது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணைய சில்லறை வர்த்தகர்களாலும் இதர மளிகைக் கடைகளாலும் ஏற்பட்டு இருக்கும் கடுமையான போட்டிகளுக்கு இடையே தோ பாயோவில் செயல்படும் ஜயண்ட் பேரங்காடி இந்த மாதத்தின் பிற்பகுதியில் மூடப்படுகிறது.

தோ பாயோ லோரோங் 4ல் இயங்கும் அந்தப் பேரங்காடி இவ்வாண்டில் மூடப்படும் ஒன்பதாவது ஜயண்ட் பேரங்காடி ஆகும்.

ஏற்கெனவே, பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு கடைகளை அது மூடி வருகிறது.

செம்பவாங் கடைத்தொகுதியில் இயங்கிய முதல்நிலை பேரங்காடி, பீஷான், அங் மோ கியோ, புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இருந்த மூன்று பேரங்காடிகள், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பாசிர் ரிஸ், ரெட்ஹில், பொங்கோல் ஆகிய பகுதியில் செயல்பட்டு வந்த சிறிய அளிவலான நான்கு ‘எக்ஸ்பிரஸ்’ கடைகள் ஆகியன மூடப்பட்டுவிட்டன.

ஆண்டின் தொடக்கத்தில் 53ஆக இருந்த ஜயண்ட் பேரங்காடிக் கிளைகள் இந்த மாதத்தில் 45ஆகக் குறையும்.

குறிப்புச் சொற்கள்