சிங்கப்பூர் கட்டண அட்டைகளின் மொத்தக் கடன் மதிப்பு, பத்து ஆண்டுகளில் காணாத அளவு 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் $9.07 பில்லியனை எட்டியது.
இதன் அர்த்தம் கட்டண அட்டைகளைக் கொண்டு பணம் செலுத்துபவர்கள் அவர்கள் செலவிட்ட தனிப்பட்ட கடன்களை முழுமையாகக் கட்டி முடிப்பதில்லை என்பதாகும்.
அவர்கள் வட்டித்தொகையை அதற்கான காலக்கெடுவுக்குள் கட்டிவந்தாலும் அசல் அப்படியே நிலுவையில் இருக்கிறது அல்லது தொடர்ந்து கட்டண அட்டைகளைப் பயன்படுத்துவதால், கடன் வளர்ந்துகொண்டே போகிறது என்று நிதி நிபுணர்கள் கருத்துரைத்தனர்.
அதனால்தான் சிங்கப்பூரில் பலர், $9 பில்லியன் கட்டண அட்டைக் கடன் நிலுவையில் உள்ளது என்பதை அறியும்போது அதனைப் பற்றி கவலை அடைவதில்லை. மாறாக அதனை நாட்டின் பரந்த பொருளியல் பிரச்சினையாகக் கருதி அலட்சியம் செய்கின்றனர்.
சொந்த நிதி இருப்புகளை முறையாகக் கவனித்து கட்டண அட்டைச் செலவினத்தைக் கட்டுப்படுத்தி எஞ்சியுள்ள கடன் தொகையை அவர்கள் கட்டிமுடிக்க முயற்சி எடுப்பதில்லை. அதனால் கட்டண அட்டையின் பயன்பாடு பத்து ஆண்டுகளில் குறைந்தாலும் கடன் விகிதம் குறையவில்லை.
கட்டண அட்டைகளின் குறைந்தபட்ச கட்டணத்தைச் செலுத்துவது கடனை அடைக்க உதவாது. கடன் தொகையை முழுமையாக அடைக்காத வரையில் அது சார்ந்த செலவுகளும் வட்டியும் இறுதியில் நிலுவை மதிப்பும் ஏற்றம் காணும் என்பதில் ஐயமில்லை.
கடன் அட்டைக்கான கட்டணத் திட்டம் ஒரு சிலந்தி வலையைப் போன்றது. மக்களில் பலர் கடன் வாங்குகின்றனர் என்பதில்லை. கடனைச் செலுத்துபவர்கள் தொடர்ந்து கடனை வளர்த்துக்கொள்கின்றனர் என்பதே உண்மை.
இவை யாவும் செயற்கையாக நிகழ்வதில்லை. குறைந்தபட்ச கட்டணத்தில் இருந்து பிரச்சினை தொடங்குகிறது. காலக்கெடுவுக்குள் அதைக் கட்டுவது கடனைக் குறைக்காது.
மீதமுள்ள அசல் தொகையின் வட்டி உடனடியாக 26 முதல் 28 விழுக்காடு அன்றாடம் கணக்கிடப்பட்டு, பின் மாத வட்டியாக வசூலிக்கப்படுகிறது


