இரவு நேரங்களில் போக்குவரத்து சத்தம்; தெம்பனிஸ் வாசிகள் கவலை

இரவு நேரங்களில் போக்குவரத்து சத்தம்; தெம்பனிஸ் வாசிகள் கவலை

2 mins read
90a00184-9716-4d17-9c2b-22a7de816485
தற்போது லோயாங் வியடக்ட்டில் மற்றொரு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமான சத்தமும் மக்களுக்குத் தொந்தரவாக உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நள்ளிரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் போக்குவரத்து சத்தம் அதிகமாக இருப்பதாக தென்பனிஸ் குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வேகமாகச் செல்லும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களின் இரைச்சல் சத்தம் தங்களின் தூக்கத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தெம்பனிஸ் ஸ்திரீட் 34 உள்ள புளோக் 366ல் வசிக்கும் 65 வயது அப்துல் ரசாக், இரவு நேரங்களில் வரும் வாகனங்களின் இரைச்சல் சத்தம் தமக்குப் பெரும் அவதியாக இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

தம்மைப் போலவே தமது பக்கத்துவீட்டுக்காரர்களும் அவதி அடைவதாக அப்துல் ரசாக் குறிப்பிட்டார். “இது தினமும் நடக்கிறது,” என்று அவர் வேதனைத் தெரிவித்தார்.

அப்துல் ரசாக் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தெம்பனிஸ் வட்டார வாசிகளிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பேசியது. அவர்கள் அனைவருமே இரைச்சல் குறித்து அக்கறைத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தெம்பனிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லீன் சென்னிடம் ஜனவரி மாதம் பேசியுள்ளதாகவும் குடியிருப்பாளர்கள் கூறினர்.

2023ஆம் ஆண்டு சாங்கி ஈஸ்ட் நோக்கிச் செல்லும் தென்பனிஸ் விரைவுச்சாலைக்கான மேம்பாலம் திறக்கப்பட்டது. அப்போது முதல் போக்குவரத்து சத்தம் தலைவலியாக இருப்பதாகக் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

மேம்பாலம் வருவதற்கு முன்னர் இரைச்சல் அதிகமாக இருந்தது, ஆனால் அது அவ்வளவு பெரிய தொந்தரவாக இல்லை. ஆனால் இப்போது நிலைமை மோசமாக உள்ளது என்று குடியிருப்பாளர்கள் சுட்டினர்.

தற்போது லோயாங் வியடக்ட்டில் மற்றொரு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமான சத்தமும் மக்களுக்குத் தொந்தரவாக உள்ளது. புதிய பாலமும் திறக்கப்பட்டால் போக்குவரத்து இரைச்சல் இன்னும் அதிகமாக இருக்கும் என்று அவர்கள் வருந்தினர்.

இரைச்சலைக் குறைக்கும் விதமாகவும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சத்தம் வருவதைத் தடுக்கும் விதமாகவும் சில தடுப்புகள் வைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தென்பனிஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்துத் துணை அமைச்சருமான பே யாம் கெங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்