சாலைப் பயனர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய போக்குவரத்துக் காவல்துறை புதிய முயற்சி

சாலைப் பயனர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய போக்குவரத்துக் காவல்துறை புதிய முயற்சி

2 mins read
337a7c64-8739-46a8-9764-1eadb05355b6
2025ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 விழுக்காடு அதிகரித்து 9,955ஆக உயர்ந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சாலை விபத்துகள் அதிகரித்ததோடு, அவை சார்ந்த இறப்புகளும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துவிட்டதால் சக சாலைப் பயனர்களின் பாதுகாப்பை ஒருவருக்கொருவர் உறுதிசெய்வதை ஊக்குவிக்க புதிய விழிப்புணர்வு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது .

போக்குவரத்துக் காவல்துறையின் ‘சாலைப் பயனர்கள் கண்காணிப்பு’ எனும் அந்த முயற்சி சனிக்கிழமை (மார்ச் 7) நிறுவப்பட்டது.

அந்த விழிப்புணர்வு முயற்சியில் இணையும் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்கள், சைக்கிளோட்டிகள் சாலைப் பாதுகாப்பு தகவல்கள், அது குறித்த எச்சரிக்கைகள், ஆலோசனைகள் உள்ளிட்ட விரிவான தகவல்களைப் பெறலாம்.

ஓட்டுநரால் பார்க்க முடியாததும், விபத்து அபாயங்களை ஏற்படுத்தக்கூடியதுமான ‘பிளைன்ட் ஸ்பாட்ஸ்’  சார்ந்த விழிப்புணர்வு அம்சங்கள், பாதுகாப்பான இடைவெளி, சாலைக் கடக்கும்போது பின்பற்றவேண்டிய சரியான நடைமுறைகள் போன்றவை தொடர்பான தகவல்களை அளிக்க இந்தப் பிரசாரம் இலக்கு கொண்டுள்ளது.

இவ்வாறு பகிர்வதன் வாயிலாக நடப்பு நிலவரம், அதற்குரிய சான்றுகள் மூலம் பிறரின் தேவைகளைப் புரிந்துகொள்வதும் சாலை நெறிமுறைகளை மேம்படுத்துவதும் இந்தப் புதிய முயற்சியின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சாலைப் பயனர்கள் அனைவருக்கும் பயிற்சி அமர்வுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

இந்த முயற்சியை அறிவித்த உள்துறை, வெளியுறவு அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் கூறுகையில், “சாலைப் பாதுகாப்பு என்பது அடிப்படையில் ஒருவருக்கொருவர் அக்கறை கொள்வது, தொடர்பு சார்ந்தது. சாலையில் ஒருவருடைய பாதுகாப்பில் மற்றவர் அக்கறை காட்டும்போது, அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள். இதனை நாம் அங்கீகரிக்கும்போது, ​​தனிப்பட்ட பொறுப்பைத் தாண்டி கூட்டு விழிப்புணர்வை நோக்கி நகர்கிறோம்,’’ என்றார்.

சாலைப் பாதுகாப்பை பொறுத்தவரையில், “நாம் ஒருவருக்கொருவர் ஆபத்துகளை உருவாக்கக்கூடும், அல்லது கவனத்தையும் பொறுமையையும் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக வீடு திரும்ப ஒருவருக்கொருவர் உதவலாம்,’’ என்றும் கூறினார் திருவாட்டி சிம்.

குறிப்புச் சொற்கள்
சாலை விபத்துசாலைப் பாதுகாப்புசிங்கப்பூர்போக்குவரத்து