தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் ஏழு நாள்களில் மும்முறை கோளாறு

1 mins read
4bba110d-c826-44e3-92d8-457a6b8e2805
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் இடம்பெறும் ஊட்ரம் பார்க் நிலையம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாம்சன்-ஈஸ்ட்கோஸ்ட் பாதையில் வியாழக்கிழமை (ஜனவரி 2) மாலை பெருவிரைவு ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது.

ரயில் கோளாறு காரணமாக சேவையில் இடையூறு ஏற்பட்டது. இதே காரணத்தால் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் ஏழு நாள்களில் மூன்றாவது முறையாக சேவையில் இடையூறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேல்டிகாட், கார்டன்ஸ் பை தி பே நிலையங்களுக்கிடையே பயண நேரம் 10 நிமிடங்கள் அதிகரிக்கலாம் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் வியாழக்கிழமை இரவு 7.38 மணிக்கு ஃபேஸ்புக்கில் தகவல் வெளியிட்டது.

சேவை இடையூறு மேலும் சில ரயில் நிலையங்களைப் பாதித்ததாக எஸ்எம்ஆர்டி சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு தெரிவித்தது. கேல்டிகாட்டிலிருந்து ‌பே‌ஷோர் நிலையம் வரை இடையூறு ஏற்பட்டதாக எஸ்எம்ஆர்டி குறிப்பிட்டது.

நிலைமை சரிசெய்யப்பட்டதாக அந்நிறுவனம் இரவு 8 மணிக்குப் பதிவிட்டது. 2024 டிசம்பர் 27, 29ஆம் தேதிகளிலும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் ரயில் கோளாறு ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்