வழக்கநிலைக்குத் திரும்பியது கிழக்கு-மேற்கு ரயில் சேவை

வழக்கநிலைக்குத் திரும்பியது கிழக்கு-மேற்கு ரயில் சேவை

2 mins read
2dca27bd-e2b8-47fa-89e4-a2b1a881f72a
ஆறு நாள் சேவை இடையூறுக்குப் பிறகு கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் ஜூரோங் ஈஸ்ட் நிலையத்துக்கும் புவன விஸ்தா நிலையத்துக்கும் இடையிலான எம்ஆர்டி சேவை அக்டோபர் 1ஆம் தேதி வழக்கநிலைக்குத் திரும்பியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆறு நாள் சேவை இடையூறுக்குப் பிறகு கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் ஜூரோங் ஈஸ்ட் நிலையத்துக்கும் புவன விஸ்தா நிலையத்துக்கும் இடையிலான எம்ஆர்டி சேவை அக்டோபர் 1ஆம் தேதி வழக்கநிலைக்குத் திரும்பியது.

அதிகாலை 5.30 மணி அளவில் ஜூரோங் ஈஸ்ட் நிலையத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் அடைந்தபோது, மின்னிலக்கப் பலகைகள், சின்னங்கள் இயங்கிக்கொண்டிருந்தன.

தற்காலிக இலவச இணைப்புப் பேருந்துகளுக்குச் செல்லும் வழியைக் காட்டிய பலகைகள் அகற்றப்பட்டுவிட்டன.

கிழக்குத் திசையை நோக்கிச் செல்லும் முதல் ரயில் அதிகாலை 5.40 மணி அளவில் ஜூரோங் ஈஸ்ட் நிலையத்தை அடைந்தது.

அதிகாலை 5.45 மணியிலிருந்து கிழக்குத் திசையை நோக்கிச் செல்லும் ரயில்கள் சீரான இடைவெளியில் சென்றுகொண்டிருந்ததாகச் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் சென்ற மேற்குத் திசை ரயில்கள் தற்காலிக வேக வரம்பைக் கடைப்பிடித்தன.

டோவர் நிலையத்துக்கும் கிளமெண்டி நிலையத்துக்கும் இடையிலான பகுதிகள் உட்பட பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடைந்த இடங்களில் அவை மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் சென்றன.

இந்த அணுகுமுறை அக்டோபர் 3ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும்.

எம்ஆர்டி ரயில்கள் வழக்கமாக மணிக்கு 60 கிலோமீட்டர் முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும்.

பாதிக்கப்பட்ட ரயில் பாதை மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியது குறித்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்திலிருந்து கிளமெண்டியில் இருக்கும் தமது வேலையிடத்துக்கு மீண்டும் ரயிலில் செல்ல முடிவதால் தமக்கு மிகவும் சௌகரியமாக இருப்பதாக குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும் 44 வயது கவிதா சிமாசலன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்