சிங்கப்பூரில் மூப்படையும் சமூதாயத்துக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில் அவர்களுக்கென பல சுற்றுலாப் பயணத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றன.
உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் அவர்களுக்கு ஏற்ப அமைதியான முறையில் பரபரப்பற்ற சூழலில் நேரத்தைச் செலவிட பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் திட்டங்களை வகுத்துவருகின்றன.
உணவு, கலாசாரம், சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, திட்டங்கள் அமைகின்றன. குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சுற்றுலாக்கள் நடத்தப்பட்டு, போதிய ஓய்வு முதியோருக்கு வழங்கப்படுகிறது.
ஒரு குழுவில் அதிகபட்சமாக எட்டு முதல் பத்து நபர்களே இடம்பெறுகின்றனர். சில நிறுவனங்கள் 25 பேர் வரை ஏற்றுக்கொள்கின்றன. கட்டுப்பாடான அளவில் பயணிகள் இருப்பதால் தனிப்பட்ட கவனத்தை அவர்கள்மேல் செலுத்த முடியும் என்று பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் கருத்துரைத்தன.
சுற்றுலாக்களின்போது அடிக்கடி முதியோர்கள் கழிவறைகளுக்குச் செல்லவும் இளைப்பாறவும் வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பயணம் செய்யும் நாடுகளில் உள்ள உணவுகளின் சுவைகளை ருசிக்கவும் அங்குள்ள பலதரப்பட்ட கலாசாரங்களை ரசிக்கவும் அவர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கப்படுகிறது.
ஓய்வுகாலத்துக்கென போதிய நிதி வளத்தைக் கொண்ட முதியோர்களுக்குப் பயண ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் அவரவர் மருத்துவ, மனநலத் தேவைகளை கருத்தில்கொண்டு செயல்படுகின்றன.
காலை ஒன்பது மணிக்குத் தொடங்கும் வெளிப்புற நடவடிக்கைகள் மாலை 4 மணிக்குள் முடித்துக்கொள்ளப்படும். எனவே ஐந்து மணிநேரத்துக்குள் முதியோரின் சுற்றுலாக்கள் நடக்கின்றன. அதன்படி பயணிகளின் கால்களுக்கு ஓய்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிங்கப்பூரில் தொண்டூழியர்களால் நடத்தப்படும் கூட்டுறவுச் சுற்றுலா நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் அதில் இதுவரை 700 உறுப்பினர்கள் உள்ளனர். அதன் வாழ்நாள் சந்தா ஆண்டுக்கு $130 முதல் தொடங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
‘சில்வர் ஹொரைசன் டிராவல் கோ-ஆப்பரேட்டிவ்’ என்ற அந்த அமைப்பில் முதியோருக்கு முதியோரே சுற்றுலாத் திட்டங்களை ஏற்பாடு செய்கின்றனர். அதன் துணைத் தலைவரான விக்டர் சியாவ், ஆண்டுதோறும் 60 முதல் 70 புது உறுப்பினர்கள் இணைகின்றனர் எனவும் அவர்களின் சராசரி வயது 40 முதல் 90 வரை என்றார்.
சிங்கப்பூரில் உள்ள பல இடங்களுக்கு அவ்வமைப்பின் உறுப்பினர்கள் நடைப்பயணம் மேற்கொள்வதோடு, மலேசியா, ஜப்பான், சீனா எனப் பல நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் சென்றுள்ளனர்.

