கிருமிப் பரவலை முறியடிப்பதற்காக நடப்பில் இருக்கும் அதிரடித் திட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படவுள்ள நிலையில் ஜூன் மாதம் இரண்டாம் தேதிக்குப் பிறகு சாங்கி விமான நிலையம் வழியாக வேறு நாடுகளுக்குப் பயணம் செய்வோருக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் பொருளியல் மற்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்பொருட்டு விமானப் போக்குவரத்தை உத்திபூர்வமாக படிப்படியாக மீண்டும் செயல்படுத்துவதன் ஓர் அங்கம் இது என சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) நேற்று (மே 20) தெரிவித்தது.
தற்சமயம், பிற நாட்டு அரசாங்கங்கள் மக்களை வேறு நாடுகளுக்கு அனுப்ப எடுக்கும் முயற்சிகளின்போது மட்டும் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்ய முடியும்.
சாங்கி விமான நிலையத்தில் பாதைகள் மாற்றத்துக்கு விமான நிறுவனங்கள் சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.
வான்வழிப் பாதுகாப்பு, பொதுமக்களின் சுகாதார அக்கறைகள், பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
அவ்வாறு சிங்கப்பூர் வழியாகச் செல்லும் வெளிநாட்டு பயணிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே இருப்பதையும் சாங்கி விமான நிலையத்தின் மற்ற பயணிகளுடன் கலக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய கடுமயான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
ஊழியர்களுடன் தொடபில் இருக்கும் ஊழியர்கள், ஏற்கெனவே நடப்பில் இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தனிநபர் பாதுகாப்பு சாதனத்தையும் அணிந்திருப்பர்.கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி இங்கு குறுகியகால வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழையவும் சிங்கப்பூர் வழியாக வெளிநாட்டினர் வேறு நாடுகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டதையடுத்து இங்கு விமானப் போக்குவரத்து சரிந்தது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

