மெக்பர்சனில் மரம் விழுந்து பேருந்துகள் வழிமாற்றம்: யாருக்கும் காயமில்லை

ஃபேஸ்புக்கில் நாடாளுமன்ற உறுப்பினரின் பதிவுகள்

மெக்பர்சனில் மரம் விழுந்து பேருந்துகள் வழிமாற்றம்: யாருக்கும் காயமில்லை

1 mins read
காலை 10.20 மணியளவில் பேருந்துகள் வழக்கம்போல செல்லத் தொடங்கின
0a3cf528-9bdf-4caa-a59e-32b30839deb2
பிப்பிட் ரோட்டின் புளோக் 92க்கும் 54க்கும் இடைப்பட்ட சாலையில் மரத்தின் பாகங்கள் கிடப்பதையும் ஊழியர்கள் அவற்றை அப்புறப்படுத்துவதையும் காட்டும் படம். - படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்
சம்பவ விவரங்களை மெக்பர்சன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் காலை 9.58 மணியளவில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
சம்பவ விவரங்களை மெக்பர்சன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் காலை 9.58 மணியளவில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். - படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்
மரம் விழுந்து சாலையின் இரு வழித்தடங்களைப் போக்குவரத்து செல்லமுடியாமல் தடுத்துவிட்டது.
மரம் விழுந்து சாலையின் இரு வழித்தடங்களைப் போக்குவரத்து செல்லமுடியாமல் தடுத்துவிட்டது. - படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மெக்பர்சன், பிப்பிட் ரோட்டில் மரம் சாய்ந்ததால் புதன்கிழமை (பிப்ரவரி 18) காலையில் சாலையின் இரு வழித்தடங்களும் இரண்டு மணி நேரம் போக்குவரத்துக்கு மூடப்பட்டன.

அவ்வழியாகச் சென்ற பேருந்துகள் வழிமாற்றப்பட்டன.

மெக்பர்சன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் இது குறித்து புதன்கிழமை காலை 9.58 மணியளவில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லைஎன்றும் வாகனங்களுக்கும் சேதமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மரீன் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் நகர மன்றம், அந்த வட்டாரத்தில் நிகழும் இதுபோன்ற சம்பவங்களின்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விழுந்த மரத்தை அப்புறப்படுத்த, செடிகொடிகள் பராமரிப்புக்காக அமர்த்தப்பட்டுள்ள குத்தகையாளரை நகர மன்றம் தொடர்புகொண்டுள்ளதையும் திருவாட்டி டின் உறுதி செய்தார்.

அந்த மரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த குத்தகையாளரால் சோதிக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

மரம் விழுந்ததன் காரணத்தை அறிய வல்லுநர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ம் அப்பகுதியில் உள்ள அனைத்து மரங்களையும் பார்வையிடும்படிக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் திருவாட்டி டின் கூறினார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, பிப்பிட் ரோட், புளோக் 92க்கும் 54க்கும் இடைப்பட்ட சாலையில் மரத்தின் பாகங்கள் கிடப்பதையும் ஊழியர்கள் அவற்றை அப்புறப்படுத்துவதையும் காணமுடிந்தது.

காலை 10.20 மணியளவில் பேருந்துகள் வழக்கம்போல சாலையில் செல்லத் தொடங்கின.

குறிப்புச் சொற்கள்