டெம்ஸி பகுதியில் இரண்டு வாகனங்களின்மீது மரம் விழுந்தது

டெம்ஸி பகுதியில் இரண்டு வாகனங்களின்மீது மரம் விழுந்தது

2 mins read
2ef24fad-2c7a-4d19-9f37-a4cfaf63c8f1
விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் சுற்றுச்சூழல் நிறுவன ஊழியர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூரின் டெம்ஸி ரோடு பகுதியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) மரம் சாய்ந்து விழுந்து இரு கார்களைச் சேதப்படுத்தியது.

மரம் சாயும்போது, பாதிக்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்றினுள் அதன் ஓட்டுநர் வலதுபுற இருக்கையில் இருந்தார். வெள்ளை நிறத்திலான அந்தக் கார் ‘நிஸான் எம்பிவி’ வகை என்று அறியப்படுகிறது.

வாடகை வாகன ஓட்டுநரான 60 வயதான திரு சைஃபுல் அங்கிருந்த ‘மியுசியம் ஆஃப் ஐஸ் கிரீம்’ என்ற கடைக்கு வெளிப்பகுதியில் இருந்து வெளியேற முயன்றபோது ஏதோ உடையும் பெரும் சத்தத்தைக் கேட்டுள்ளார். அந்தக் கடை டெம்ஸி வட்டாரத்தின் லோவென் ரோட்டில் உள்ளது.

“சத்தம் வந்த திசையை நோக்கி நான் பார்த்தபோது இடதுபுறத்தில் மெதுவாக மரம் வாகனக் கூரைமீது சாய்வதைக் கண்டேன். வாகனத்தை உடனே பின்புறம் திருப்ப முயன்றேன் ஆனால் பலனில்லை. மரம் பயணிகள் அமரும் இருக்கைக்கு மேல் உள்ள பாகத்தில் விழுந்தது,” என்று அவர் சம்பவத்தை விவரித்தார்.

மரம் காரின்மீது விழுந்த நிலையில் அவரால் அதனுள்ளிருந்து வெளியேற முடியவில்லை. சிறிது நேரம் கழித்து, அங்கிருந்த ஒரு கடையின் ஊழியர்கள் அவரைக் காரில் இருந்து வெளியேற்ற உதவினர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (எஸ்சிடிஎஃப்) ஓர் மருத்துவ வாகனமும் அங்கு விரைந்து வந்தடைந்தன. திரு சைஃபுல்லை அவர்கள் சோதித்ததில் அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அவரது குடும்பத்தினரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

மருத்துவ வாகனத்தின் உதவி தேவைப்படவில்லை என்று எஸ்சிடிஎஃப் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது. பகல் 12.45 மணிவரையில் லோவென் ரோடு மூடப்பட்டிருந்தது. விழுந்த மரத்தின் பாகங்களை சுற்றுச்சூழல் நிறுவன ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்பாகத்தில் மரம் விழுந்து சேதமடைந்த மற்றொரு வாகனம் ‘பிஎம்டபிள்யு’ வகை நீல நிறக் கார் என்று தெரிகிறது. அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த அதன் ஓட்டுநர் அங்கு காணப்படவில்லை.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் சிங்கப்பூர் நில ஆணையத்தை மேல் விவரங்களுக்கு தொடர்புகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மரம்விபத்துசுற்றுச்சூழல்ஊழியர்சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைகுடிமைத் தற்காப்புகுடிமைத் தற்காப்புப் படைமருத்துவம்கார்தனியார் வாடகை கார்ஓட்டுநர்காயம்குடும்பம்

தொடர்புடைய செய்திகள்