தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுமத்ரா அருகே நிலநடுக்கம்; சிங்கப்பூரில் அதிர்வுகள் உணரப்பட்டன

1 mins read
cb0d5264-3a86-4fd1-b089-961b5eed665c
படம்: METEOROLOGICAL SERVICE SINGAPORE -

இந்தோனீசியாவின் தெற்கு சுமத்ரா பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்டது.

நிலநடுக்கம் 84 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது, அதனால் அந்நாட்டு வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் இரண்டு மணி நேரத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

சுமத்ராவில் கடலுக்கு அருகே வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.

அந்நிலநடுக்கத்தால் அண்டை நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் அதிர்வுகள் உணரப்பட்டன.

தற்போது சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிங்கப்பூருக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லை என்று சிங்கப்பூர் வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டது குறித்து சிலர் தங்களது சமூக ஊடகங்களில் தகவல் பதிவிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்