துவாஸ் சவுத் குப்பை எரியாலையின் செயல்பாட்டுக் காலம் 2035 வரை நீட்டிப்பு

துவாஸ் சவுத் குப்பை எரியாலையின் செயல்பாட்டுக் காலம் 2035 வரை நீட்டிப்பு

1 mins read
6e69ef96-9e1c-4e01-b74e-6160b6247556
துவாஸ் சவுத் குப்பை எரியாலை (டிஎஸ்ஐபி). - படம்: குளூக்

துவாஸ் சவுத் குப்பை எரியாலையின் (டிஎஸ்ஐபி) மறுவடிவமைப்பு, புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை தேசிய சுற்றுப்புற வாரியம், மிட்சுபி‌ஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஏ‌ஷியா பசிபிக் பிரைவெட் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

டிஎஸ்ஐபியின் செயல்பாடுகளை 2035ஆம் ஆண்டு வரை நீட்டிக்கும் நோக்கில் தேசிய சுற்றுப்புற வாரியம் வரைந்துள்ள திட்டத்துக்கான முயற்சிகளின் ஓர் அங்கமாக மறுவடிவமைப்பு, புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிங்கப்பூரில் கழிவை எரிசக்தியாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளும் இரண்டாவது ஆகப் பெரிய ஆலை டிஎஸ்ஐபி. கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து இது செயல்பாட்டில் இருக்கிறது.

ஒரு நாளில் 3,000 டன் கழிவை இதில் எரிக்க முடியும். கழிவை எரிக்கும்போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அந்த மின்சாரத்தில் 30 விழுக்காடு டிஎஸ்ஐபி செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இதர 70 விழுக்காடு மின்சாரம் சிங்கப்பூரின் தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு அனுப்பப்படுகிறது.

டிஎஸ்ஐபிக்கான மறுவடிவமைப்பு, புதுப்பிப்புப் பணிகள் இவ்வாண்டு ஜூன் மாதம் தொடங்கி 2027ஆம் ஆண்டு நான்காம் காலாண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குப்பை எரிப்பு, கழிவின் அளவை 90 விழுக்காடு வரை குறைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய வகைசெய்கிறது.

அதோடு, எரிக்கப்பட்ட பிறகு உருவாகும் சாம்பலிலிருந்து உலோகப் பொருள்களை மீட்கவும் முடிகிறது.

குறிப்புச் சொற்கள்