பிடோக்கில் காசநோய் பரிசோதனைகள், தொற்றுநோய் கண்காணிப்பின் ஒரு பகுதியாகும்: டான்

பிடோக்கில் காசநோய் பரிசோதனைகள், தொற்றுநோய் கண்காணிப்பின் ஒரு பகுதியாகும்: டான்

2 mins read
943faae4-de53-43ac-9b79-782a4333c790
பிடோக்கில் உள்ள மூன்று இடங்களில் வசிக்கும் சுமார் 700 குடியிருப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தொற்றுநோய் தடுப்பு நிலையம் கட்டாய காசநோய் பரிசோதனையை நடத்தியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொற்றுநோய்களின் பரவலைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மேலும் செயல்திறன்மிக்க கண்காணிப்பு முயற்சியின் ஒரு பகுதியாகவே, மே மாதம் பிடோக்கில் காசநோய் பரிசோதனைகள் நடத்தப்பட்டன என சுகாதார மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் தெரிவித்தார்.

தேவைப்படும்போது தொற்றுநோய் தடுப்பு நிலையம் (சிடிஏ) இதுபோன்ற முன்னெச்சரிக்கை பரிசோதனைகளை நடத்தும் என்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

“எதிர்காலத்தில் நோய்ப் பரவல்கள் ஏற்படுவதைத் தடுக்க, முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து, ஆரம்பத்திலேயே தடுக்க முடியும் என்பதால் அவ்வாறு செய்கிறோம்,” என்று கூறிய அவர், நோய்ப் பரவல் ஏற்பட்ட பிறகு மட்டும் தடுப்பதற்கான செலவு மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மே மாதத்தில், மரபணு ரீதியாக 13 நோய்த்தொற்று பாதிப்புகளைக் கொண்ட மூன்று குழுமங்களுடன் தொடர்புடைய, பிடோக்கில் உள்ள மூன்று இடங்களில் வசிக்கும் சுமார் 700 குடியிருப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தொறறுநோய் தடுப்பு நிலையம் கட்டாய காசநோய் பரிசோதனையை நடத்தியது. மேலும், அந்த இடங்களுக்குச் சென்று வந்தவர்களுக்குத் தன்னார்வப் பரிசோதனையும் வழங்கப்பட்டது.

மொத்தம் 3,525 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில், ஒருவருக்குக் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

ஓர் உயிரினத்தின் மரபணுத்தொகுதியின் வரிசையைத் தீர்மானிக்கும் முழு மரபணு வரிசைப்படுத்துதலில் ஏற்பட்டுள்ள அண்மைய முன்னேற்றங்கள், அந்த 13 சம்பவங்களும் மரபணு ரீதியாகத் தொடர்புடையவை என்பதைக் கண்டறிய உதவியதால், இந்தப் பரிசோதனை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே நடத்தப்பட்டது என்று திரு டான் குறிப்பிட்டார்.

அந்தப் பகுதிகளுக்கு அடிக்கடி செல்பவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய பரிசோதனை உதவும் என்று அவர் கூறினார்.

இது முன்பே கையாளப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய அதேவேளையில், பொதுத் தகவல்தொடர்புகளை மேம்படுத்துவது மற்றும் பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இதுபோன்ற பிரச்சினைகளைச் சிறப்பாக விளக்குவது எப்படி என்பது குறித்துக் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருப்பதை மூத்த துணை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“அந்தப் பாடங்கள் எங்களின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளிலும், அடுத்த முறை நாங்கள் கையாளும் அணுகுமுறையிலும் இணைத்துக்கொள்ளப்படுவதை உறுதி செய்வோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
கண்காணிப்புகாசநோய்மரபணுதொற்றுநோய்