ஹவ்காங் அவென்யூ 4 - புவாங்கோக் கிரீன் சாலைச் சந்திப்பில் மூன்று நாள்களுக்குள் இரண்டு முறை வாகன விபத்து நிகழ்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 28) இரவு அந்த இடத்தில் இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் செங்காங் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கும் இரவு 10:15 மணிவாக்கில் தகவல் வந்ததாக அதிகாரிகள் கூறினர்.
மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட மூவரும் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னர் அதே இடத்தில் செவ்வாய்க்கிழமை காலை, பேருந்து எண் 43 மற்றும் ஒரு கார் மோதியதில் எட்டுப் பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.