இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்து; இருவர் மருத்துவமனையில்

1 mins read
9d747b0d-5e2b-4d9d-8456-961159fd7f65
53 வயது ஆடவர் ஒருவர் விபத்து தொடர்பான விசாரணையில் உதவி வருவதாக காவல்துறை கூறியது. - படம்: எஸ்ஜி ரோட் விஜிலாண்டே

சுவா சூ காங்கில் சனிக்கிழமை (பிப்ரவரி 1ஆம் தேதி) இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சுவா சூ காங் டிரைவ், கிராஞ்சி விரைவுச்சாலைக்கு மாறும் அதன் துணைச் சாலை சந்திப்பில் இந்த விபத்து மதியம் 1.45 மணிக்கு நிகழ்ந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

விபத்தில் சிக்கிய 64 வயது ஆடவரும் அவர் ஓட்டிய காரில் இருந்த 58 வயது மாதும் சுயநினைவுடன் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த காணொளி போக்குவரத்து சந்திப்பில் நேராகச் சென்று விபத்தில் சிக்கிய காருக்கு பின்னால் சென்ற காரில் இருந்த கேமரா பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் சந்திப்பில் நேராக முன்னால் சென்ற கருநிற காரும் வலதுபுறமாக திரும்பிச் சென்றுகொண்டிருந்த வெள்ளி நிறத்திலான மற்றொரு காரும் மோதிக் கொண்டது தெரிகிறது.

இந்த விபத்து தொடர்பில் 53 வயது கார் ஓட்டுநரான ஆடவர் ஒருவர் விசாரணையில் உதவி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்