பிடோக் படகுத்துறையில் மூழ்கிய படகு; இருவர் மீட்பு

1 mins read
d5437482-b066-4cae-9259-3c7b28df5585
பிடோக் ஜெட்டியில் இளைப்பாறும் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொதுமக்கள். - படம்: சாவ் பாவ்

பிடோக் படகுத்துறையில் ஜூலை 8ஆம் தேதி விநியோகப் படகு ஒன்று மூழ்கியதாகவும், அதிலிருந்து இரண்டு ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த விநியோகப் படகில் நீர் நுழைந்ததாகவும், அது படகுத்துறைக்குக் கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தொலைவில், காலை 10.30 மணி அளவில் நங்கூரமிடும் இடத்தில் மூழ்கியதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் ஆணையம் கூறியது.

“விநியோகப் படகில் இருந்த இரண்டு ஊழியர்களும் பாதுகாப்பாக மற்றொரு படகிற்கு மாற்றிவிடப்பட்டனர். யாருக்கும் காயம் இல்லை,” என்று ஆணையம் தெரிவித்தது.

“தூய்மைக்கேடு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. அந்தப் பகுதியில் கடல்சார்ந்த பாதுகாப்பில் எந்த பாதிப்பும் இல்லை,” என்றும் அது சொன்னது.

அதிகாரிகள் சம்பவத்தை விசாரித்துவரும் நிலையில், மூழ்கிய படகை மீட்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்