ஆடம் ரோட்டில் டிசம்பர் 28ஆம் தேதி நடந்த கார் விபத்தில் 70க்கு மேற்பட்ட வயதுடைய இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை, காரை ஓட்டிச்சென்ற 77 வயது ஆடவரும் அவருடன் பயணம் செய்த 72 வயது மூதாட்டியும் மாண்டதாகக் கூறியது.
லோர்னி ரோட்டை நோக்கிச் செல்லும் ஆடம் ரோட்டில் மாலை 6.10 மணியளவில் அவர்கள் சென்ற கார் சறுக்கிச் சென்றதாக நம்பப்படுவதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
லோர்னி ரோட்டை நோக்கிச் செல்லும் ஆடம் ரோட்டில் அந்த கார் சறுக்கிச் சென்று விபத்துள்ளானதாக நம்பப்படுகிறது. - படம்: ஷின் மின் நாளேடு
காரை ஓட்டிய முதியவரும் அவருடன் சென்ற மூதாட்டியும் சம்பவ இடத்திலேயே மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஷின் மின் நாளேடு