சிவப்பு விளக்குப் பகுதி என்று அறியப்படும் கேலாங்கில் இளம் வயது ஆடவருடன் சண்டையிட்ட 70 வயது ஆடவர் திங்கட்கிழமை (மார்ச் 9) உயிரிழந்தார்.
நெஞ்சுப் பகுதியில் ஆயுதத்தால் குத்தப்பட்ட அவர் சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிகிறது.
அவரைத் தாக்கியதாகக் கூறப்படும் 48 வயது ஆடவர் நினைவுடன் கூடிய நிலையில் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மோதல் தொடர்பில் திங்கட்கிழமை காலை 8.15 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் கூறினார்.
சம்பந்தப்பட்ட ஆடவர் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்றும் 48 வயது ஆடவர் வேண்டுமென்றே ஆயுதத்தால் தாக்கி 70 வயது ஆடவரைக் காயப்படுத்தினார் என்றும் அப்பேச்சாளர் சொன்னார்.
அவர்களில் ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் இன்னொருவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
காலை 10.25 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்றபோது அங்குக் காவல்துறை அதிகாரிகள் ஐவர் இருந்ததைக் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டது.
அங்குள்ள சமயச் சங்கத்திற்கு அருகிலுள்ள கார் நிறுத்தப் பகுதி யாரும் செல்ல முடியாதபடி தடுக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு குப்பைத்தொட்டியை ஒட்டிய நடைபாதையில் ரத்தக்கறைகள் இருந்தன.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2024ஆம் ஆண்டு உடல்சார் குற்றச் செயல்கள் தொடர்பில் 19,967 புகார்கள் பதிவான நிலையில், 2025ல் அந்த எண்ணிக்கை 20,857ஆக அதிகரித்தது.
அக்காலகட்டத்தில், கத்தி சார்ந்த சம்பவங்களும் 131லிருந்து 137 எனச் சற்றே கூடின.

