தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$470,000 மதிப்பிலான போதைப்பொருளைக் கடத்தியதாக இரு ஆடவர்கள் மீது சந்தேகம்

1 mins read
83b0dd51-f394-4b2b-9681-67797588444c
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு $470,000க்கும் அதிகம் என்று சிஎன்பி தெரிவித்தது. - படம்: சிஎன்பி

போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் 53, 62 வயதுகளில் இரு ஆடவர்கள் ஜனவரி 2ஆம் தேதியன்று ஜூரோங் வெஸ்ட் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

கடத்தப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு, $470,000க்கும் மேற்பட்டது என்று மதிப்பிடப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், ஒரு வாரத்திற்குச் சுமார் 907 போதைப் புழங்கிகள் பயன்படுத்தும் அளவுக்கு இருந்ததாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) அதிகாரிகள் ஜனவரி 3ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

அதிகாரிகள் கைது செய்தபோது 53 வயது ஆடவர் கடுமையாக எதிர்த்துப் போராடியதாகவும் சிஎன்பி குறிப்பிட்டது.

அதே நாளன்று 62 வயது ஆடவரை அதிகாரிகள் நடைபாதையில் கைதுசெய்தனர்.

குறிப்புச் சொற்கள்