தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் விபத்து; மருத்துவமனையில் இருவர்

2 mins read
bf61bbd0-7f5f-434b-ae1b-3ee320acddc5
தீவு விரைவுச்சாலையில் விபத்திற்குப் பிந்திய காட்சியைக் காட்டும் காணொளிப்படம். - படம்: எம்பிஎஸ்சி/ஃபேஸ்புக்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் ஏற்பட்டுள்ள விபத்தை அடுத்து மோட்டார் சைக்கிளோட்டிகள் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை (மே 26) காலை ஏறத்தாழ 8.10 மணிக்கு இந்தச் சம்பவம் பற்றிய தகவலைப் பெற்றதாக காவல்துறை கூறியது.

ஆடவர்களான அவ்விரு மோட்டார் சைக்கிளோட்டிகளும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

விபத்திற்குப் பிந்திய தருணங்களைக் காண்பிக்கும் காணொளி ஒன்றில், விரைவுச்சாலையின் நடுத்தடத்தில் இரண்டு சைக்கிள்களும் பக்கவாட்டில் வீழ்ந்து கிடக்கக் காணப்பட்டன. இந்தக் காணொளியில் ஓட்டுநர்கள் யாரும் காணப்படவில்லை.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் அண்மைய மாதங்களில் பல விபத்துகள் நேர்ந்துள்ளன.

மே 24ஆம் தேதி, ஜோகூர் பாருவுக்குள் நுழைந்துகொண்டிருந்த கார் ஒன்று, சிங்கப்பூரை நோக்கி வந்துகொண்டிருந்த காஸ்வே லிங்க் பேருந்தின்மீது மோதியது.

காலை கிட்டத்தட்ட 5.30 மணிக்கு அந்த விபத்து நடந்ததை அடுத்து கார் ஓட்டுநரும் மூன்று பயணிகளும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அத்துடன் அந்தச் சாலை ஏறத்தாழ மூன்று மணி நேரம் மூடப்பட்டதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.

மற்றொரு சம்பவத்தில், ஏப்ரல் 5ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் ஒன்றுடன் மோதி காயமடைந்த மோட்டார்சைக்கிளோட்டுநர், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

ஏப்ரல் 5ஆம் தேதியன்று நடந்த மற்றொரு சம்பவத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்