சிகரெட்டுகளுக்கு உரிய தீர்வை, வரி செலுத்தாமல் வேனில் கடத்திய இருவரை சிங்கப்பூர் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
செப்டம்பர் 18ஆம் தேதி பீஷான்-அங் மோ கியோ பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 44 வயது சிங்கப்பூரரும் 21 வயது மலேசியரும் கைதானதாக புதன்கிழமை (செப்டம்பர் 25) சிங்கப்பூர் சுங்கத் துறை கூறியது.
இந்தச் சோதனையில் பீஷான்-அங் மோ கியோ பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வேன்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். ஒரு வேனிலிருந்து தீர்வை செலுத்தப்படாத 2,958 பெட்டி சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்குப் பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு வேனில் மேலும் 150 சிகரெட் பெட்டிகள் இருந்தன.
விசாரணையில் அறிமுகமில்லாத ஒருவர், சிகரெட்டுகளை பெற்று விநியோகிப்பதற்காக அவர்களை வேலைக்கு அமர்த்தியதாக தெரிகிறது என்று சிங்கப்பூர் சுங்கத் துறை கூறியது.
கைப்பற்றய சிகரெட்டுகளுக்கு தீர்வை, வரி செலுத்தாமல் ஏமாற்றிய தொகையின் மதிப்பு 33,820 வெள்ளி. சிகரெட்டுகளும் வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை தொடர்கிறது.