பாலஸ்டியரில் 16வது மாடியில் மயில்கள்

பாலஸ்டியரில் 16வது மாடியில் மயில்கள்

1 mins read
b7041766-4c21-43b1-8ce8-586f9ead7e03
குடியிருப்பாளருக்கு அதிர்ஷ்டம் வரும் என்று இணையவாசிகள் சிலர் கூறினர். - படங்கள்: ஃபேஸ்புக்

பாலஸ்டியர் குடியிருப்பாளர் ஒருவர் தமது 16வது மாடி கூட்டுரிமை வீட்டுக் கூரை மேற்பரப்பில் இரண்டு மயில்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அவை அங்கு எப்படி வந்தன என்ற கேள்வி அவருக்கு.

கிரேக் வய்லி என்ற அந்த ஆடவர், இரண்டு மயில்கள் இங்குமங்கும் மேய்வதைக் காட்டும் காணொளிகளையும் படங்களையும் ஃபேஸ்புக்கில் நவம்பர் 28ஆம் தேதி பகிர்ந்துகொண்டார்.

இந்த உயரத்திற்கு அவற்றால் பறக்க முடியும் என்று தமக்குத் தெரியாது என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார் அவர்.

விதைகளை ஆரவாரமின்றி மயில்கள் கொத்தித் தின்பதைக் காணொளியில் பார்க்க முடிந்தது.

ஆடவரைப் பொறுத்தவரை இடத்தை வலம்வந்து வெவ்வேறு செடிகளைக் கொறித்துக்கொண்டிருந்த மயில்கள் இரண்டும் மனநிறைவுடன் காணப்பட்டதாகப் பதிவில் கூறப்பட்டது.

அதோடு ஆடவரை இரு மயில்களும் கண்டுகொள்ளவும் இல்லை. இரவு வேளை அவ்விடத்திற்கு வந்த மயில்கள் மறுநாள் பகல் பறந்து சென்றுவிட்டதாக கிரேக் வய்லி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்