மார்பகப் புற்றுநோயாளிகளை ஊக்குவிக்க மாறுபட்ட நடவடிக்கை

2 mins read
615f459b-2217-453d-9264-11599fed4afe
நிட்டட் நாக்கர்ஸ் இயக்கத்தை நடத்தும் லின் ஈ (இடது), அமைச்சர் ஜோசஃபின் டியோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

https://www.straitstimes.com/singapore/volunteers-knit-bra-inserts-for-breast-cancer-survivors-to-dress-well-regain-confidence

மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகி குணமடைந்தோரை ஊக்குவித்து நன்கு ஆடை அணிந்துகொள்ள வைக்கும் நோக்கில் தொண்டூழியர்கள், மார்கச்சைக்குள் பொருத்தும் மாதிரி மார்பை உருவாக்கிவருகின்றனர்.

மார்கச்சைக்குள் வைத்துக்கொள்ள மாதிரி மார்பை உருவாக்கும் பணியில் ஈடுபடும் நிட்டட் நாக்கர்ஸ்@என்எச்ஜி (Knitted Knockers@NHG) அமைப்பைத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தொடங்கிவைத்தார். குணமடைந்த மார்பகப் புற்றுநோயாளியான லின் ஈ, 74, அதை நடத்துகிறார்.

திருவாட்டி ஈ, பல ஆண்டுகளுக்கு முன்பு மாதிரி மார்பை உருவாக்கினார். தனது கண்டுபிடிப்பை மற்ற மார்பகப் புற்றுநோயாளிகளுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார், 2015ஆம் ஆண்டு நிட்டட் நாக்கர்ஸ் சிங்கப்பூர் இயக்கத்தைத் தொடங்கினார். அது, அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இயக்கத்தின் சிங்கப்பூர் வடிவமாகும்.

இப்போது மாதிரி மார்புகள், சிங்கப்பூரில் மறுசீரமைக்கப்பட்டுள்ள எல்லா மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக மார்பு அகற்றப்பட்ட எல்லா பெண்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது.

அந்த இயக்கத்தின்கீழ் திருவாட்டி ஈ, மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு நிட்டட் நாக்கர்ஸ் எனப்படும் மாதிரி மார்புகளை உருவாக்கித் தர தொண்டூழியர்களை ஒன்றுசேர்த்தார்.

தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின்கீழ் (என்எச்ஜி) நிட்டட் நாக்கர்ஸ்@என்எச்ஜி அமைப்பில் தொண்டூழியர்கள் மாதிரி மார்புகளை உருவாக்கி விநியோகிக்கலாம். டான் டொக் செங் மருத்துவமனையின் மார்பக மருந்தகத்தின் 15ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் அமைச்சர் டியோ அதைத் தொடங்கிவைத்தார்.

மாதிரி மார்பு இயக்கம், டான் டொக் செங் மருத்துவமனையின் மார்பக மருந்தகம் மேற்கொண்டிருக்கும் நற்பணிகளுக்குச் சான்று என்று திருவாட்டி டியோ நிகழ்ச்சியில் கூறினார்.

“மருத்துவப் பராமரிப்பு வழங்குவதுடன் நோயாளிகளின் மனநலனுக்கும் ஆதரவளிக்கவேண்டும். நோயாளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவி அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்கு ஆக அதிக முக்கியத்துவம் வழங்கியிருப்பது, குறிப்பாக மார்பு அகற்றப்படும் சிகிச்சையை மேற்கொண்ட பெண்களுக்கு வழங்கியிருக்கிறீர்கள்,” என்றார் அமைச்சர் டியோ.

குறிப்புச் சொற்கள்