ராஃபிள்ஸ் பிளேசில் உள்ள யுஓபி வங்கியின் முதன்மைக் கிளையில் தங்கக் கட்டி வாங்குவதற்கான முகப்புகள் இயங்கும் நேரம் பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து நீட்டிக்கப்படுகிறது.
பொது விடுமுறைகளைத் தவிர்த்து, வாரநாள்களில் அவை காலை 9.30 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இயங்கும். தற்போது மாலை 4.30 மணிக்கு முகப்புகள் மூடப்படுகின்றன.
தங்கக் கட்டி வாங்க விரும்புவோர் முதலில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று யுஓபி வங்கி திங்கட்கிழமை (பிப்ரவரி 9) தெரிவித்தது.
தங்கக் கட்டிகள் வாங்குவது அண்மையில் அதிகரித்துள்ளது.
தங்கக் கட்டி வாங்க விரும்புபவர்கள் அல்லது தங்கள் தங்கச் சேமிப்புக் கணக்குகளைத் தங்கக் கட்டிகளாக மாற்றிக்கொள்ள விரும்புபவர்கள் அதற்கு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து முன்பதிவு செய்யாமல் வங்கிக்குச் செல்பவர்கள் தங்கக் கட்டிகள் தொடர்பான பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது.
பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 6 மணி முதல் யுஓபி வங்கியின் இணையப்பக்கம் மூலம் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இந்நடவடிக்கை மூலம் காத்திருப்பு நேரம் குறையும் என்று யுஓபி வங்கி தெரிவித்தது.

