மூன்று குடியிருப்பு நிலப் பகுதிகள் விற்பனை

2 mins read
38293009-a60f-4bfe-bc63-5a7c194ea69b
புதிதாக வெளியிடப்பட்ட மூன்று நிலப் பகுதிகளும் 99 ஆண்டுகாலக் குத்ததைக்கு உரியவை. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் (GLS) இவ்வாண்டின் பிற்பாதிக்கான மூன்று குடியிருப்பு நிலப் பகுதிகளை நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

பேஷோர் ரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பு நிலம், மீடியா சர்க்கிள் (பார்சல் ஏ), மீடியா சர்க்கிள் (பார்சல் பி) ஆகியன அவை.

இந்த மூன்று நிலப் பகுதிகளும் உறுதிசெய்யப்பட்ட பட்டியலின்கீழ் விற்பனைக்கு விடப்படுகின்றன.

தரைத்தளத்தில் கடையும் இரண்டாம் தளத்தில் வீடும் கட்டுவதற்கான நிலப் பகுதிகள் அவை.

மீடியா சர்க்கிள் (பார்சல் ஏ) நிலப் பகுதி 7,629.7 சதுர மீட்டர் பரப்பளவு உள்ளது.

அதில் 325 வீடுகளைக் கட்டமுடியும்.

அதன் அதிகபட்ச மொத்தத் தரைப்பகுதி 28,230 சதுர மீட்டர்.

அதேபோல, 10,027.6 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள மீடியா சர்க்கிள் (பார்சல் பி) நிலப் பகுதியில் ஏறத்தாழ 500 வீடுகளைக் கட்டமுடியும்.

அதன் அதிகபட்ச மொத்தத் தரைப்பகுதி 43,119 சதுர மீட்டர்.

பேஷோர் ரோடு நிலப்பகுதி 10,497.3 சதுர மீட்டர் பரப்பளவு உள்ளது.

அதில் 515 வீடுகளைக் கட்டலாம். அதன் அதிகபட்ச தரைப்பகுதி 44,089 சதுர மீட்டர்.

இந்த மூன்று காலி மனைகளும் 99 ஆண்டு காலக் குத்தகையைக் கொண்டவை.

இவ்வாண்டின் இரண்டாம் பாதிக்கான அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின் உறுதிசெய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்று உள்ள 5,050 வீடுகளின் ஒரு பகுதி அவை.

ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தின் அருகே கவரக்கூடிய இடத்தில் அமைந்துள்ளதால் பேஷோர் ரோடு காலிமனைக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ஹட்டன்ஸ் ஏஷியா சொத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் யிப் தெரிவித்து உள்ளார்.

மேலும், பேஷோர் வட்டாரத்தில் அமைய இருக்கும் புதிய தனியார் குடியிருப்புக்கான தளம் அது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்