நகர மறுசீரமைப்பு ஆணையம், சிட்டி ரோடு, வீராசாமி ரோடு ஆகியவற்றில் உள்ள நிலப்பகுதிக்கான ஒப்பந்தத்தை, அதிகபட்ச ஒப்பந்தப்புள்ளி கோரிய ஒய்.கே. லேண்ட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
சிட்டி ரோடு, வீராசாமி ரோட்டில் உள்ள இடம், 2026 மார்ச் 5ஆம் தேதியன்று ஒப்பந்தப்புள்ளிக்கு விடப்பட்டது. அந்த இடத்திற்கான ஒப்பந்தப்புள்ளி, 2026 ஜூலை 28ஆம் தேதியன்று நிறைவடைந்தது. அதையடுத்து அந்த இடம் 99 ஆண்டுக் குத்தகைக்கு வழங்கப்பட்டது.
அந்த இரண்டு சாலைகளில் 3,407 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட குடியிருப்புப் பகுதி, தளப் பரப்பின் சதுர மீட்டருக்கு $10,357.50 எனும் அடிப்படையில், ஒப்பந்த விலையான $35,288,000.00க்கு ஒய்.கே. லேண்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.


