அமெரிக்க வர்த்தகத் திட்ட மோசடி: சிங்கப்பூரர் இருவர் உட்பட எண்மர்மீது குற்றச்சாட்டு

அமெரிக்க வர்த்தகத் திட்ட மோசடி: சிங்கப்பூரர் இருவர் உட்பட எண்மர்மீது குற்றச்சாட்டு

1 mins read
1b8f5af6-7a93-4fe0-ad18-6383cbccbb4f
 34 வயது ஜி, 2024ஆம் ஆண்டு சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டார்.  - படம்: JOSH GE/ஃபேஸ்புக்

அமெரிக்காவில் பல நிறுவனங்களின் நிதி, இணைப்புத் திட்டங்கள் குறித்து அந்நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்கள் அளித்த தகவல்களைப் பயன்படுத்தி வர்த்தகம் மேற்கொண்டு பல மில்லியன் அமெரிக்க டாலர்களை மோசடிக் கும்பல் ஒன்று சுருட்டியது.

அந்தக் கும்பலைச் சேர்ந்த சிங்கப்பூரர் இருவர் உட்பட எண்மர்மீது அமெரிக்க நீதிமன்றத்தில் நவம்பர் 18ஆம் தேதி குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டன.

2016ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த மோசடி நடத்தப்பட்டது.

பேங்க் ஆப் அமெரிக்காவின் சொத்து மேம்பாட்டுப் பிரிவாக பிரான்சில் செயல்பட்டு வரும் ‘மெர்ரில் லிஞ்ச்’ எனும் பிரெஞ்சு வங்கியில் வங்கியாளராகப் பணியாற்றிய சமி கோவாட்ஜா, அவருடன் இணைந்து பிரெஞ்சு உணவகம் ஒன்றை வைத்திருந்த ஈமா சஃபி, சிங்கப்பூரரான ஜி ஷி ஆகியோர் இந்த மோசடியை வழிநடத்தினர்.

அமெரிக்க அதிகாரிகளின் தடுப்புக் காவலில் இருக்கும் சஃபி, 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. 34 வயது ஜி, 2024ஆம் ஆண்டு சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டார்.

அவர், நாடு கடத்தும் நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தப்பட்டவர்.

மற்றொரு சிங்கப்பூரரான 39 வயது தேவ் ஆனந்த் துரை, அமெரிக்க நீதித் துறையால் தலைமறைவான குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அறுவரில் ஒருவர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூரர்கொலைகுற்றச்சாட்டுஅமெரிக்கா