சிங்கப்பூர் அரசாங்கம், தகுதி பெறும் சிங்கப்பூரர்களுக்கு இவ்வாண்டு 800 வெள்ளி வரையிலான ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகளை வழங்கியது.
வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க அந்த உதவித்தொகை இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் 500 வெள்ளியும் ஜூன் மாதம் 300 வெள்ளியும் மக்களுக்கு வழங்கப்பட்டது.
பற்றுச்சீட்டுகள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் காலாவதியாகிவிடும். அதனால் விரைவில் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
‘சிடிசி’ பற்றுச்சீட்டுகளை குடியிருப்பு பகுதிகளில் உள்ள உணவங்காடிகள், கடைகள், பேரங்காடிகளில் பயன்படுத்தலாம்.