தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாழ்வியல் இலக்கியப் பொழில் 94வது சந்திப்பு

1 mins read
1827741f-38b7-4ea5-a9dd-3baa7e1e3786
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்தர நிகழ்ச்சியும் 94வது சந்திப்பும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) இடம்பெறுகிறது. - படம்: வாழ்வியல் இலக்கியப் பொழில்

வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்தர நிகழ்ச்சியும் 94வது சந்திப்பும் ஹவ்காங் அவென்யூ 6, எண் 3ல் உள்ள பொங்கோல் சமூக மன்ற அரங்கில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) மாலை 6 மணிக்கு நடைபெறும்.

வழக்கமான இலக்கியச் சிற்றுரைகளுடன் தாயும் சேயும் இணைந்து படைக்கும் ‘வேரும் விழுதும்’ போன்ற அங்கங்கள் இடம்பெறும். முனைவர் கி. துர்காதேவி, மதிப்புறு முனைவர் N. விஜயலட்சுமி ஆகியோர் சேர்ந்து படைக்கும் ‘இயலும் இசையும்’ என்னும் தலைப்பிலான சிறப்புரையும் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தியின் ‘தீ’ என்னும் தலைப்பில் அறிமுக உரையும் இடம்பெறவுள்ளன.

SG60 சிறப்புப் போட்டிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும். மேல் விவரங்களுக்கு பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி - 9228 8544.

குறிப்புச் சொற்கள்