சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு அதிகரிப்பு

ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மலேசிய நாணயத்தின் மதிப்பு உயர்வு

சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு அதிகரிப்பு

2 mins read
791e0efe-b10a-4112-b4c5-9770fc8348f4
மலேசிய ரிங்கிட் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிங்கப்பூர் டாலருக்கு நிகராக, வலுவான நிலைக்கு உயர்ந்துள்ளது.  - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மலேசிய ரிங்கிட் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிங்கப்பூர் டாலருக்கு நிகராக, வலுவான நிலைக்கு உயர்ந்துள்ளது.

எரிசக்தி விலை அதிகரிப்பு, எரிசக்தி ஏற்றுமதி நாடான மலேசியாவுக்குச் சாதகமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான நேரடி வெளிநாட்டு முதலீடும் இந்த உயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

மார்ச் 18 (புதன்கிழமை) ரிங்கிட் 0.2 விழுக்காடு வலுவடைந்து சிங்கப்பூர் வெள்ளிக்கு 3.0615 ஆக உயர்ந்தது, இது 2021 மார்ச் மாதத்திற்குப் பிறகான மிக உயர்ந்த அளவாகும்.

மலேசிய ரிங்கிட் மதிப்பின் ஏற்றத்திற்கான காரணங்கள்

“ரிங்கிட் இந்த ஆண்டு ஆசியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயங்களில் ஒன்றாகத் திகழ வேண்டும்,” என்று டானி சுவானப்ருதி உள்ளிட்ட கோல்ட்மேன் சாக்ஸ் குழுமத்தின் ஆய்வாளர்கள் மார்ச் 14 அன்று ஒரு குறிப்பில் தெரிவித்தனர்.

வட கடலில் இருந்து எடுக்கப்படும் உயர்தர கச்சா எண்ணெய் வகையான பெரண்ட் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து இருப்பதற்கான அறிகுறிகளைத் தொடர்ந்து, நிகர எரிசக்தி ஏற்றுமதி நாடான மலேசிய நாணயத்தை வலுவாக்குகிறது.

ஒப்புநோக்க, சிங்கப்பூர் உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகள் நிகர எண்ணெய் இறக்குமதியாளர்களாக உள்ளன. எரிசக்தி செலவு அதிகரிக்கும்போது அவற்றின் நாணய மதிப்புக் குறைகிறது.

சிங்கப்பூரும் மலேசியாவும் நெருங்கிய வணிக உறவுகளைக் கொண்டிருப்பதுடன், இருநாடுகளுக்கும் இடையிலான நிலப் போக்குவரத்து உலகின் மிகவும் பரபரப்பான ஒன்றாகத் திகழ்வதால் சிங்கப்பூர் வெள்ளி- மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ரிங்கிட்வெள்ளிசிங்கப்பூர் வெள்ளிமதிப்புநாணயம்