இரு காரையும் ஒரு லாரியையும் மோதிய வாகனம்: காவல்துறை விசாரணை

1 mins read
61069426-abe3-4315-9199-3047d656fdcd
அங் மோ கியோ அவென்யூ 1ல் உள்ள புளோக் 223ல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) சம்பவம் நேர்ந்தது. - காணொளிப் படம்: எஸ்ஜி ரோட் விஜிலான்ட்டி / ஃபேஸ்புக்

அங் மோ கியோவில் நிகழ்ந்த வாகன விபத்தின் தொடர்பில் காவல்துறை மேற்கொண்டுள்ள விசாரணையில் கார் ஓட்டுநரான 70 வயது ஆடவர் உதவி வருகிறார்.

அங் மோ கியோ அவென்யூ 1ல் உள்ள புளோக் 223ல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) நிகழ்ந்த விபத்தில் இரண்டு கார்களும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்டிருந்தன.

விபத்துக் குறித்து அன்றிரவு மணி 8.20க்குத் தெரியவந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் கேட்ட கேள்விக்கு அது பதில் தந்தது.

இணையத்தில் பதிவிடப்பட்ட காணொளியில், கார் நிறுத்துமிடத்திலிருந்து பின்னால் செல்லும் சிவப்பு போ‌ஷ கார், பின்னர் முன்னுக்கு வந்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரிமீது மோதுவதைப் பார்க்கமுடிகிறது.

சிவப்பு கார் இரண்டாவது முறையாகப் பின்னுக்குப் போய் மீண்டும் முன்னால் சென்று இரண்டு கார்களுக்குப் பக்கத்தில் இருந்த பிஎம்டபிள்யூ செடான் காரை இடிக்கிறது.

பிஎம்டபிள்யூ காரின் முன்பக்கம் கடுமையாகச் சேதமுற்றதை நிழற்படமொன்று காட்டுகிறது.

மூன்றாவது முறையாகப் பின்னுக்குச் செல்லும் போ‌ஷவை அதற்குப் பிறகு காணொளியில் பார்க்கமுடியவில்லை.

குறிப்புச் சொற்கள்