தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் தீமாவில் வாகன நெரிசலை எதிர்பார்க்கலாம்: சிங்கப்பூர்க் காவல்துறை

1 mins read
cfb43781-595d-46d3-9ab5-f39f2b544e2b
சிங்கப்பூர் முதல் அதிபரின் மனைவி புவான் நூர் ஆயி‌‌‌ஷா முகமது சலீமின் இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு ப’அல்வி பள்ளிவாசல் இருக்கும் லூவிஸ் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. - படம்: சாவ்பாவ்

புக்கிட் தீமாவின் சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்று செவ்வாய்கிழமை (ஏப்ரல் 22) சிங்கப்பூர்க் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மறைந்த திருவாட்டி புவான் நூர் ஆயி‌‌‌ஷா முகமது சலீமின் நல்லுடல் சடங்குபூர்வ பீரங்கி வாகனத்தில் லூயிஸ் சாலையில் உள்ள பா’அல்வி பள்ளிவாசலிலிருந்து கிராஞ்சி அரசு இடுகாட்டிற்குக் கொண்டு செல்லப்படுவதால் வாகன நெரிசலை ஓட்டுநர்கள் எதிர்கொள்ளலாம் என்று காவல்துறை குறிப்பிட்டது.

அதை முன்னிட்டு டல்வி வட்டாரம், லூவிஸ் சாலை, புக்கிட் தீமா சாலை, உட்லண்ட்ஸ் சாலை ஆகியவற்றில் வாகன நெரிசல் ஏற்படக்கூடும்.

குடியிருப்பாளர்களும் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே லூவிஸ் சாலையில் செல்ல அனுமதிக்கப்படுவர். லூவிஸ் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால் அவை அப்புறப்படுத்தப்படும் என்று காவல்துறை எச்சரித்தது.

மேல் விவரங்களுக்குப் புக்கிட் தீமா அக்கம்பக்க காவல் நிலையத்துக்கு 6462 9999 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்