வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் ஏற்ற இறக்கம்

வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் ஏற்ற இறக்கம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Oct 2026 - 5:39 pm

1 mins read

புதன்கிழமை (அக்டோபர் 21) முடிவடைந்த வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) ஏலக்குத்தகையில் அதன் கட்டணங்கள் ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்துள்ளன.

சிறிய வகை கார்களுக்கான கட்டணம் 1.54 விழுக்காடு உயர்ந்து $132,004 எட்டியது. முந்தைய ஏலத்தில் இது $130,001ஆக இருந்தது. இது இப்பிரிவில் இதுவரை பதிவான இரண்டாவது மிக உயர்ந்த கட்டணமாகும்.

பெரிய வகை கார்களுக்கான கட்டணம் 1.38 விழுக்காடு அதிகரித்து, $130,100லிருந்து $131,901 ஆக உயர்ந்தது.

சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 0.34 விழுக்காடு உயர்ந்து $92,200ஆகப் பதிவானது. முந்தைய ஏலத்தில் இது $91,889ஆக இருந்தது. அதேவேளையில், மோட்டார்சைக்கிள்களுக்கான கட்டணம் 2.12 விழுக்காடு குறைந்து $10,778 வெள்ளியாகப் பதிவானது. முந்தைய ஏலத்தில் இதன் கட்டணம் $11,012ஆக இருந்தது.

பொதுவாகப் பெரிய கார்களுக்குப் பயன்படுத்தப்படும் பொதுப் பிரிவுக்கான கட்டணம் 0.88 விழுக்காடு சரிந்து $135,790 ஆகப் பதிவானது. முந்தைய ஏலத்தில் இது $137,000ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்